ரஜினியின் முடிவு... முருகனின் மௌனம்...!
தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இன்று கோவை வந்திருந்தார்.கோவையில் செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது ரஜினியின் முடிவு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் முருகனோ அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் மௌனமாக நகர்ந்து சென்றுவிட்டார்.தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்திருக்கின்றார். ரஜினியின் வருகையை மிகவும் எதிர்பார்த்த கட்சி பாரதிய ஜனதா மட்டுமே.
ரஜினிகாந்த் அறிவிப்பு குறித்து பல்வேறு கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த நிலையில் பாஜக மாநில தலைவர் முருகன் கருத்து தெரிவிக்க மறுத்துச் சுட்டது பல்வேறு ஊகங்களைக் கிளப்பி இருக்கிறது.ரஜினியை வைத்து கணிசமான வாக்குகளைப் பெற நினைத்த பாஜகவுக்குத் தொடக்கத்திலேயே பின்னடைவு அதனால் தான் பாஜக மாநில தலைவர் முருகன் இதுபற்றி கருத்து எதுவும் சொல்லவில்லை என்கிறார்கள் சில அரசியல் நோக்கர்கள்.