பொறணி பேசும் ஹவுஸ்மேட்ஸ் ,ரம்யாவின் சந்தேகம் - பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 85
சக்கரவல்லியே பாடலுடன் துவங்கியது நாள். திங்கள் ஆனாலே நாமினேஷன் பீவர் தான். இந்த வாரமும் ஓபன் நாமினேஷன் தான்.இந்த வார நாமினேஷன் ஆனவர்கள் ரம்யா, சோம், ஆஜித், ஷிவானி, கேப்பி. சமைக்கறதுக்கு ரம்யா மட்டும் தான் இருக்காங்கனு தெரிஞ்சும் ரம்யாவை நாமினேட் செய்யறாங்க. சோத்துக்கு என்னடா செய்வீங்க. அடுத்த செட்ல ஆஜித், ஷிவானி, கேப்பி 3 பேரும்தான் பன்சிங் பேக்ஸ். அவங்களுக்கு உள்ளேயே மாத்தி மாத்தி குத்திகிட்டாங்க. சோம் மட்டும் தான் எக்ஸ்ட்ரா. ஆரி, பாலா ரெண்டு பேரும் சோம் பேரை சொன்னது ஆச்சரியம். பாலாவும், ரியோவும் நாமினேஷனுக்கு வராம இருந்தது அதைவிட ஆச்சரியம்.
நாமினேஷனுக்கு அப்புறம் அங்கங்க உக்காந்து பொறனி பேசிட்டு இருந்தது மட்டும் தான் நடந்தது. ஆஜித்தும், பாலாவும் கேப்பியை பத்தி பேசறாங்க. ஆஜித் நாமினேஷனுக்கு தனக்கு சொல்லப்பட்ட காரணத்தை பத்தி கோபமா பேசிட்டு இருக்கான். இதுக்கு மேல என்ன இன்வால்வ்மெண்ட் கொடுக்கறதுனு சொன்னதை கேட்ட போது, இதுக்கு மேலயுமா அழகு வேணும்னு வடிவேலு டயலாக் தான் ஞாபகம் வந்தது. அர்ச்சனாவை பத்தி கேப்பி கிட்ட சொன்ன விஷயத்தை அர்ச்சனா கிட்ட போட்டு கொடுத்ததை பத்தி பேசிட்டு இருந்தான் பாலா.
அந்த பக்கம் பாலா பத்தி சோம் கிட்ட பொறணி பேசிட்டு இருந்தாங்க கேப்பி. பாலாவோட ஸ்ட்ராட்டஜினு நேரடியா கமல் சார் கிட்ட சொன்னேன். அதைவிட இன்னும் எப்படி ஓபனா விளையாடறதுனு கேப்பி கேட்ட கேள்வி நியாயமானது தான். ஆனா பாலானு சொன்னா மட்டும் தான் குரல் வருது. அது ஒரு குறை. கேப்பி பேசிட்டு இருக்கும் போது சோம் குளிச்சு முடிச்சு பாத்ரூம்ல இருந்தான். அங்க உக்காந்து தான் பேசனுமா கேப்பி.?
அடுத்து பொறணி ஷிவானியும், ரம்யாவும். ஆரியை பத்தி. ஆரி முதல் ஆளா சேவ் ஆகற காரணம் தெரியாம ரம்யா குழப்பத்துல இருக்காங்க. காலர் ஆப் தி வீக்ல ஆரி கிட்ட கேள்வியை டீகோடிங் பண்ணிட்டு இருந்தாங்க. அந்த கேள்வி ஆரிக்கான பாராட்டா, விமர்சனமா என்பது ரம்யாவோட சந்தேகம். வழக்கமான பிக்பாஸ் சீசனா இருந்தா ஆடியன்சோட கைதட்டல் மூலம் அவங்க பல்ஸ் தெரிஞ்சுக்கலாம். இந்த சீசன் அப்படி இல்லை. ஆரி தொடர்ந்து முதல் நபரா காப்பாற்றப்படறார். ஆனா அதுக்கான உண்மையான காரணம், வெளிய இருக்கறவங்களோட மனநிலை உள்ள இருக்கறவங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அதனால ரம்யாவுக்கு சந்தேகம் இருந்துட்டே இருக்கு.
காலர் ஆப் தி வீக்ல ஆரியை அம்பி கூட செஞ்சதை பத்தி ஷிவானி கூட டிஸ்கஸ் பண்றாங்க. ஆரி பல நேரத்துல சரியா பேசறார். ஆனா மத்தவங்களை பத்தி குறை சொல்லும் போது, அதே இடத்துல தன்னை பத்தி உயர்த்தி பேசிக்கறதும் அவரோட வழக்கம்னு ஷிவானி சொன்ன பாயிண்ட் முக்கியமானது. ரொம்பவே நுனுக்கமான அவதானிப்பு. ஆரி பேசறதை உன்னிப்பா கவனிச்சா இதை கண்டுபிடிக்க முடியும்.
அடுத்த பொறனி ரியோ, கேப்பி, சோம் மூணு பேரும் ஆரியை பத்தி பேசறாங்க. சோமை நாமினேட் செய்யும் போது ஆரி ஒரு ரீசன் சொன்னாரு. ஒரு டாஸ்க்ல சரியான தீர்ப்பு சொல்லாததை காரணமா சொன்னாரு. அதை பத்தி பேசும் போது சோம் சொன்னதை கேட்டு தலையே சுத்திடுச்சு. "நாமினேட் செய்யனும்னா நேரடியா செய்ய வேண்டியது தானே. நான் டஃப்பான கண்டஸ்டண்ட் அதனால நாமினேட் செய்யறேன்னு காரணம் சொல்ல வேண்டியது தானேனு" சிரிச்சுட்டே சொன்னாரு. எல்லாம் எங்க நேரம்னு நினைச்சுக்க வேண்டியது தான்.
கேப்டன் ஆரி கிச்சன்ல பிசியா இருந்தாரு. கிச்சன் டீம்ல ஷிவானியும் இருக்காங்க போல. ஆரி கேப்டன்சிங்கறதால ஷிவானி பயங்கரமா வேலை செய்யறாங்க போல.
உதயம் பருப்பு வகைகள் வழங்கிய ஸ்பான்சர் டாஸ்க்.
அடுத்து நைட் லிவிங் ஏரியால க்ளீன் செய்யறதுல ஆரிக்கும் பாலாவுக்கும் பிரச்சினை. போன வாரம் பாலாவோட கேப்டன்சி முடியும் போது லிவிங் ஏரியாவை க்ளீன் செஞ்சு கொடுக்க ஒரு நைட் டைம் வாங்கிருந்தாரு. அதன்படி காலைல க்ளீன் செஞ்சு ஹாண்ட் ஓவர் பண்ணிருக்காரு. அன்னிக்கு நைட்டும் க்ளீன் செய்யனும்னு சொன்ன போது முடியாதுனு சொல்லிட்டு இருந்தாரு. இந்த வாரம் ஆஜித் தான் வைஸ் கேப்டன் போல.
ஆஜித் கிட்ட வீரமா பேசிட்டு ஆரி வந்து கேக்கும் போது வேற மாதிரி பேசிட்டு இருந்தாரு பாலா. ரொம்ப நேரம் இதுவே போச்சு.
இந்த வார டாஸ்காவது சுவரஸ்யமாவது இருக்குமானு தான் தெரியல.