பிக் பாஸ் புகழ் அனிதா சம்பத்தின் தந்தை உடல் நலக்குறையால் இன்று காலமானார்..
அனிதா சம்பத் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது சொந்த முயற்சியால் தற்பொழுது ஒரு புகழ் பெற்ற செய்தி வாசிப்பாளராக வளர்ந்துள்ளார். இவர் தன்னை தேடி வந்த பிக் பாஸ் வாய்ப்பை தட்டி கழிக்காமல் 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்க சம்மதம் தெரிவித்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார். அப்பொழுது தான் அனிதா தனது தந்தையை கடைசியாக பார்த்துள்ளார். அவரது தந்தை ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார்.
பிக் பாஸ் வீட்டில் ஒரு தைரியமான பெண்மணியாக தனித்து நின்று மற்ற ஹவுஸ் மேட்ஸ்க்கு கடின போட்டியாளராக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை மக்களால் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார். இவர் வீட்டிற்கு சென்றதில் இருந்து பிக் பாஸ் வீட்டில் இருந்ததை குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை. ஆனால் அனிதாவின் கணவர் கேக் வெட்டி அனிதாவை சிறப்பாக வரவேற்க்கும் வீடியோவை அனிதாவின் கணவர் அவரது இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் அனிதாவின் தந்தை உடல் நலக்குறைவால் உயிர் இழந்ததாக ஊடகம் முழுவதும் செய்திகளை வெளியிட்டு வருகிறது. அனிதாவின் தந்தை சீரடிக்கு சென்று திரும்பி வரும் வழியில் மாரடைப்பால் உயிர் இழந்ததாக கூறுகின்றனர். இதனையடுத்து ரசிகர்கள், நண்பர்கள் என அனைவரும் அனிதாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.