அடுத்தடுத்து நடிகர்களை குறிவைக்கும் கொரோனா.. இப்போ யாருக்கு தெரியுமா??
கடந்த வருடம் இறுதியில் தொடங்கிய கொரோனா இன்று வரை ஒழிந்தபாடில்லை. இதனால் அடிமட்ட மக்களில் இருந்து பணக்கார மக்கள் வரை அனைவரும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவின் தாக்கம் அதிகம் ஆனதால் மத்திய மற்றும் மாநில அரசாங்கம் உலகம் முழுவதும் ஊரடங்கை பிறப்பித்தது. கொரோனா சிறிது அடங்கிய நிலையில் இருந்த பொழுது கொஞ்சம் கொஞ்சமாக ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டது. அதுபோல திரைப்படங்கள் எடுக்க அரசாங்கம் அனுமதியளித்தது.
இதனால் மாசக்கணக்கில் வீட்டிற்க்குள் அடங்கி இருந்த நடிகர்கள், நடிகைகள் அனைவரும் நடிக்க தயாராகினர். தமிழகத்தில் சிறிது ஓய்ந்திருந்த கொரோனா மறுபடியும் கோரத் தாண்டவம் ஆட தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீள முடியாமல் பாடகர் பாலசுப்ரமணியம் உயிர் இழந்தார். நடிகை தமன்னா, ரகுல் போன்றவர்கள் கொரோனவுடன் எதிர்த்து போராடி மீண்டு வந்துள்ளனர். தற்பொழுது தெலுங்கு நடிகரான ராம் சரண் என்பவருக்கு கொரோனா பரவல் உறுதியாகியுள்ளது.
இவர் தெலுங்கு சினிமாவில் முதன்மை கதாநாயகனாக விளங்ககூடியவர். இவர் தமிழில் ரகளை, மாவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மாவீரன் திரைப்படம் பயங்கர ஹிட் பெற்றதால் இவருக்கு தமிழ் சினிமாவிலும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவரது சகோதரனான வருண் தேஜிக்கும் கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது. இதனால் இருவரும் தனிமை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.