டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு இலவச WIFI: ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு!

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு இலவச வைஃபை வசதியை ஏற்படுத்தி கொடுக்கவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 34 நாட்களாக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். எனவே, வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாய சங்கங்களுடன் 5 முறை மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

தொடர்ந்து, வரும் 31-ம் தேதி 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே, 34 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு முக்கியமாக செல்போன் பயன்படுகிறது. செல்போன் மூலம் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. எனவே, செல்போன் வைத்திருந்தாலும், இணைய வசதி தேவைப்படுகிறது. எனவே, விவசாயிகளுக்கு இணைய வசதி பூர்த்தி செய்ய ஆம் ஆத்மி கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக ஆம் ஆத்மி எம்எல்ஏ ராகவ் சாதா கூறுகையில், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆம் ஆத்மி சார்பில் விவசாயிகளுக்கு இலவச WIFI வசதியை கொடுக்க முடிவு செய்துள்ளோம். அதன் ஒரு பகுதியாக அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் முதல் WIFI ஹாட்ஸ்பாட் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு பல்வேறு தரப்பினர் பலவிதமான உதவிகள் செய்து வரும் நிலையில், இலவச WIFI வசதி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

More News >>