அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதைக்கு உதாரணமான பெங்களூரு பெண்!
அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக பெங்களூர் பெண்ணின் செயல் மாறியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சவீதா சர்மா என்ற 58 வயதான பெண் ஒருவர் தினந்தொறும் தனக்கு பிடித்த உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்து உணவு உண்டு மகிழ்வித்து வந்துள்ளார். இந்நிலையில், புகழ்பெற்ற சமூக வலைதளமான முகநூலில் உணவு ஆர்டர் செய்வது குறித்த அற்புத விளம்பரம் ஒன்றை சவீதா சர்மா பார்த்துள்ளார்.
அந்த அற்புத விளம்பரத்தில் ஒரு சாப்பாடு 250 ரூபாய்க்கு வாங்கினால் மற்றொரு சாப்பாடு இலவசம் என்று ஆடி தள்ளுபடி போல் விளம்பரம் இருந்துள்ளது. இதனால், மகிழ்ச்சியடைந்த சர்மா உடனே செல்போன் எடுத்து விளம்பரத்தில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். தொலைபேசியில் பேசிய நபர் சாப்பாடு ஆர்டர் செய்வதற்கு முதலில் 10 ரூபாய் செலுத்தினால் போதும் என்றும் மீதமுள்ள பணத்தை டெலிவரி செய்யும்போது செலுத்த வேண்டும் எனக்கூறி வெப்சைட் லிங்க் ஒன்றை அனுப்பி அதில், ஏடிஎம் கார்ட் நம்பர், ஏடிஎம் பின் நம்பர், போன் நம்பர் போன்றவற்றை நிரப்ப சொல்லியுள்ளனர்.
சம்பாவும் ஒரு சாப்பாடு இலவசம் என்ற மகிழ்ச்சியில் அப்படியே செய்துள்ளார். மகிழ்ச்சி அடங்குவதற்குள் சர்மாவின் மொபைலுக்கு மற்றொரு மணி அடித்தது. அது என்னவென்றால், உங்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ.49,996 எடுக்கப்பட்டு உள்ளதாக என்று குறுச்செய்தி வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த சர்மா மீண்டும் ஆர்டர் செய்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆஃப் என்று வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து சவீதா சர்மா பெங்களூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சவீதா சர்மாவின் இந்த செயல் அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக மாறியுள்ளது.