இந்தியாவில் ரூ. 135 கோடி சம்பளம் வாங்கும் ஒரே ஹீரோ..
பிரபல நடிகர் தனது சம்பளத்தை ரூ 135 கோடியாக உயர்த்தி இருக்கிறார். இவர் ஹாலிவுட் நடிகர் அல்ல, இந்திய நடிகர் தான். கோலிவுட் ஹீரோக்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 100 கோடி சம்பளம் வாங்குகிறார். நடிகர் விஜய் தனது 65வது படத்துக்கு 100 கோடி சம்பளம் பேசி இருக்கிறார். அதேபோல் நடிகர் அஜீத்குமார் ரூ 35 கோடியிலிருந்து ரூ. 40 கோடி சம்பளம் வாங்குகிறாராம். ஆனால் இவர்களையெல்லாம் மிஞ்சி இருக்கிறார் ரஜினியின் வில்லன் நடிகர் ஒருவர். இவர் தலா ஒரு படத்துக்கு 135 கோடி சம்பளம் வாங்குகிறார். 2.0 படத்தில் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக நடித்தவர் இந்தி நடிகர் அக்ஷய்குமார். இவர் இந்தியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்
.2020ம் ஆண்டு அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் 2020ம் ஆண்டுக்கான பட்டியலை போர்ப்ஸ் இதழ் சமீபத்தில் வெளியிட்டது. அதில் இந்திய அளவில் அதிக சம்பளம் பெறும் நடிகராக முதலிடத்தை அக்ஷய்குமார் பிடித்திருந்தார். 52 வயதாகும் அக்ஷய் குமார் கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் 99 கோடி வாங்கிக்கொண்டிருந்தார். பிறகு 108 கோடியாக்கினார். இதையடுத்து 117 கோடியாக அதிகப்படுத்தினார்.
தற்போது ரூ.135 கோடியாக சம்பளத்தை உயர்த்தி உள்ளார். 2022ம் ஆண்டு வரை புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் அக்ஷய். அந்த ஆண்டுக்கான சம்பளமாக 135 கோடியை அவர் வாங்குகிறார். தயாரிப்பாளர்களால் அதிகம் தேடப்படும் நடிகராக அக்ஷய்குமார் உள்ளார். அவர் கேட்கும் சம்பளம் தரவும் அவர்கள் தயாராக உள்ளனர். இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அக்ஷய் குமார் உருவாகி இருக்கிறார். வருடத்துக்கு 4 படங்களில் அக்ஷய் நடித்துவிடுகிறார். தற்போது அட்ரங்கி ரே, பெல்பாட்டம், பச்சான் பாண்டே, சூர்யவானிஷி, ரக்ஷ பந்தன், பிருத்விராஜ் மற்றும் ராம் சேது ஆகிய படங்களில் நடிக்கிறார். அக்ஷய் குமார் தினமும் 18 மணி நேரம் உழைத்தாலும் தனது குடும்பத்தைக் கவனிக்கவும். மனைவி டுவிங்கில் கண்ணாவுடன் நேரத்தைச் செலவிடவும் தனிக் கவனம் செலுத்துகிறார். டுவிங்கிள் கண்ணாவுக்கு 47வது பிறந்த நாள் வந்தது. ரசிகர்களும் நண்பர்களும் அவருக்கு வலை தளத்தில் வாழ்த்து பகிர்ந்தனர்.
கணவர் அக்ஷய் குமார் மனைவியுடன் சைக்கிளில் ஜோடியாக இருப்பது போல் ஒரு புகைப் படத்தை வெளியிட்டு மெசேஜ் பகிர்ந்தார். அதில், "கேள்விக்குரிய வாழ்க்கை முடிவுகளின் இன்னொரு வருடம் காத்திருக்கிறது. ஆனால் அவை அனைத்தையும் உன்னுடன் பகிர்ந்து வாழ்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் எனக் குறிப்பிட்டார்.2020ம் ஆண்டு கொரோனா ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டு முடியும் தருவாயில் கொரோனா 2வது அலை தகவல் பரவி வருகிறது. இதையொட்டியே அக்ஷய்குமார் கேள்விக்குரிய இன்னொரு வருடம் என குறிப்பிட்டிருப்பதாக தெரிகிறது.