நடிகருடன் ரகசிய இடம் சென்ற நடிகை..
2020 முடிந்து 2021 புத்தாண்டு தொடங்க இன்னும் ஒரு நாளே பாக்கி உள்ளது. கொரோனா வைரஸ் காலகட்டமாக இருப்பதால் எல்லா இடங்களிலும் கூட்டமாகக் கூடி கொண்டாட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா தனது உருவத்தை மாற்றிக் கொண்டு பரவி வருவதாகவும் இங்கிலாந்தில் புது வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா ஊரடங்கு தளர்வில் பாலிவுட் தொடங்கி கோலிவுட் நடிகைகள் வரை பலர் விடுமுறை பயணம் மேற்கொண்டனர், நடிகைகள் காஜல் அகர்வால், சமந்தா, டாப்ஸி. ரகுல் ப்ரீத் சிங், பிரணிதா, வேதிகா, சோனாக்ஷி சின்ஹா, போன்றவர்கள் மாலத்தீவு சென்று விடுமுறையைக் கொண்டாடினர். புத்தாண்டு பிறப்பதற்குள் அவர்கள் அனைவரும் இந்தியா திரும்பினர். சமீபத்தில் நடிகை நிஹாரிகா தந்து கணவர் சைதனாவுடன் மாலத்தீவு புறப்பட்டுச் சென்றார். புத்தாண்டையும் அவர்கள் அங்கேயே கொண்டாடுகின்றனர்.
விடுமுறை பயணத்தைக் கழிக்கச் சென்ற நடிகைகள் எங்குச் செல்கிறோம் என்பதைச் சொல்லி விட்டுச் சென்றார். ஆனால் ஒரு நடிகை, நடிகருடன் புத்தாண்டு கொண்டாட எங்குச் செல்கிறார் என்பதைச் சொல்லாமல் பறந்திருக்கிறார். அவர் நடிகை தீபிகா படுகோனே இந்தி நடிகர் ரன்வீர் வீர் சிங்கை மணந்தார். இவர்கள் இருவரும் அவ்வப்போது படங்களில் சேர்ந்து நடிக்கின்றனர். 2 ஆண்டுக்கு முன் பஜ்ரங் மஸ்தானி படத்தில் நடித்திருந்தனர். முஸ்லிம் மன்னரின் மகளான மஸ்தானி இந்து பிரமண மன்னர் பஜ்ரங்கை காதலிக்கிறார். அதற்கு எதிர்ப்பு கிளப்புகிறது. கிளைமாஸில் இருவரும் பழிவாங்கப்பட்டு இறக்கிறார்கள் என்பதாக அப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. மும்பை விமான நிலையத்தில் தீபிகா கணவர் ரன் வீர் சிங்குடன் நேற்று வந்திருந்தார். இருவரும் புத்தாண்டு கொண்டாட ரகசிய இடத்துக்கு புறப்பட்டுச் சென்றனர். முன்னதாக தீபிகா பிரவுண் நிறத்தில் காஸ்டியூம் அணிந்திருந்தார்.