நடிகருடன் டேட்டிங்கை உறுதி செய்த பிரபல நடிகை..
ஜோடியாக வலம் வரும் நடிகர், நடிகைகள் பல உள்ளனர். ஒரு சிலர் மிக நெருக்கமாக தங்களது உறவை வைத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளிப்படையாகவே டேட்டிங் செய்வதுடன் அந்த படங்களை நெட்டில் பகிர்கின்றனர்.தெலுங்கில் மகேஷ்பாபுடன் பரத் அனே நேனு என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர் கியாரா அத்வானி. தமிழில் இப்படம் பரத் எனும் நான் என்ற பெயரில் திரைக்கு வந்தது.
கியாரா அத்வானி இந்தி நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் டேட்டிங் செய்வதாகவும் இருவரும் காதலிப்பதாகவும் கிசு கிசு வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் அதை இருவரும் உறுதி செய்யவில்லை. தற்போது அவர்கள் டேட்டிங் செய்வது, காதலிப்பதும் உறுதியாகி உள்ளது. சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா இருவரும் புத்தாண்டு கொண்டாடுவதற்காக மாலத் தீவுக்கு ஜோடியாகப் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் இரு வரும் மும்பை விமான நிலையத்துக்கு ஜோடியாக வருவதை புகைப்பட நிபுணர்கள் சூழ்ந்துகொண்டு படம் பிடித்தனர். இருவரும் எந்த மறுப்பும் சொல்லாமல் போஸ் அளித்தனர்.
சித்தார்த் ஆரஞ்சு நிற பேண்ட், கறுப்பு நிற டி -சர்ட். சில்வர் நிற ஓவர் கோட்டும், கியாரா ஜீன்ஸ் டிராக், டி ஷர்ட் அணிந்திருந்தார். இருவரும் ஜோடியாகச் சென்ற இந்த காட்சியே காதலுக்கு உறுதி கூறுவதாக உள்ளது என நெட்டிஸன்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து இந்தி படமொன்றில் ஜோடியாக நடித்து வருகின்றனர்.ஏற்கனவே புத்தாண்டைக் கொண்டாட நடிகர் ரன்பீர் கபூர்-அலியாபட் மற்றும் ரன்வீர் சிங்-தீபிகா படுகோனே, நடிகை நிஹாரிகா-கணவர் சைதன்யா ஆகியோர் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக மாலத் தீவு சென்றுள்ளனர். மாலத்தீவு நட்சத்திரங்களின் சொர்க்கமாகத் திகழ்கிறது. கடந்த மாதங்களில் நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வால், பிரணிதா, வேதிகா, டாப்ஸி எனப் பல நடிகைகள் மாலத் தீவில் விடுமுறை கொண்டாட்டத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடிவிட்டுத் திரும்பினார்கள்.