திருப்பதி கோயிலில் ஜனவரி மாத தரிசன டிக்கெட்டுகள் : இணையதள பதிவு இன்றுமுதல் துவக்கம்

வரும் ஜனவரி மாதத்தில் திருப்பதி ஏழுமலையானைத் தரிசனம் செய்வதற்கான, 300 ரூபாய் சிறப்புத் தரிசன டிக்கெட்டுகளை இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை எனத் தேவஸ்தானம் துவக்கியுள்ளது.தேவஸ்தான இணையத்தில் இன்று காலை 9 மணி முதல் இதற்கான முன்பதிவு துவங்கியது.நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப் படுவார்கள் எனவே முன்பதிவு செய்யாத பக்தர்கள் திருமலைக்கு வரவேண்டாம் எனத் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

More News >>