ரஜினியுடன் இணைந்தது ஏன்? அர்ஜூன மூர்த்தி விளக்கம்
பாஜகவிலிருந்து விலகி ரஜினி தொடங்கவிருந்த அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்த அர்ஜூன மூர்த்தி ரஜினிகாந்த் கட்சி தொடங்க வில்லை என்ற அறிவிப்பால் கடும் அப்செட் ஆகி இருக்கிறார்.இருந்தபோதும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தனது நிலையைத் தெளிவுபடுத்த இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.அவர் சொன்னது:யாரும் ரஜினியின் முடிவை எதிர்த்துப் போராட வேண்டாம். தமிழக மக்களின் நலனை ரஜினி எப்போதும் விட்டுத்தர மாட்டார்.
தமிழக மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற மன உளைச்சலில் தான் இப்போது ரஜினிகாந்த் இருக்கிறார். தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என ரஜினி விரும்பியது உண்மை. மருத்துவர்களின் அறிவுறுத்தல் காரணமாகவே அவர் கட்சி தொடங்கவில்லை.என்னைப் பொருத்தவரை மோடியும், ரஜினியும் எனக்கு இரண்டு கண்கள். பாஜகவோடு எனக்கு இன்னும் நல்ல உறவு உள்ளது. மாற்றம் வேண்டும் என்பதற்காகவே ரஜினியுடன் இணைந்தேன் எனத் தெரிவித்தார்.