சில்லி பன்னீர் ரெசிபி.. செம டேஸ்ட்.. உடனே ட்ரை பண்ணி பாருங்க..
பன்னீரில் பல வித ஆரோக்கிய குணங்கள் நிறைந்துள்ளது. பாலில் இருந்து பன்னீர் தயாரிக்கப்படுவதால் அதில் கால்சியம் போன்ற சத்துக்கள் நேரடியாக நம் உடலை தேடி வருகிறது. பன்னீரில் பல வித உணவு வகைகளை செய்யலாம். இப்பொழுது சுவையான சில்லி பன்னீர் ரெசிபி எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்..
தேவையான பொருள்கள்:-பன்னீர் - 1 கப் குடைமிளகாய் - 1 கப் வெங்காயம் - 1 பூண்டு - 5 பல் பச்சை மிளகாய் - 1 சோயா சாஸ் - 1/2 ஸ்பூன் தக்காளி சாஸ் - 1 1/2 ஸ்பூன் மிளகுத் தூள் - 1/2 ஸ்பூன்எண்ணெய் - 1 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு மைதா மாவு - 1 ஸ்பூன் சோள மாவு - 1 ஸ்பூன்மிளகுத் தூள் - 1/4 ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1ஸ்பூன் உப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:-முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் மைதா மாவு, சோள மாவு, மிளகுத் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கரைத்து கொள்ள வேண்டும். நறுக்கிய பன்னீரை கலந்து வைத்த கலவையில் நன்றாக பிரட்டி கொள்ளவும். பின்னர், அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி பிராட்டியை பன்னீரை சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும்.
அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும். பிறகு குடைமிளகாய், சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத் தூள் ஆகியவை சேர்த்து நன்றாக 10 நிமிடம் கிளறி விடவும். வறுத்து வைத்த பன்னீரை கிரேவியில் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விட வேண்டும். சுவையான சில்லி பன்னீர் தயார்..