குவாரன்டைன் எப்படி இருந்தது மை பிரெண்ட்.. இந்திய அணியுடன் இணைந்த ரோகித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி செல்வதற்கு முன் ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் அணிகளுக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா எந்த அணியிலும் இடம் பெறவில்லை. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்குக் காயம் ஏற்பட்டதால் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து டெஸ்ட் அணியில் மட்டும் அவர் சேர்க்கப்பட்டார். ஆனால் காயம் குணமாகாததால் டெஸ்ட் அணியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார்.இந்நிலையில் மும்பையில் ரோகித் சர்மாவுக்கு உடற்தகுதி தேர்வு நடந்தது. முன்னாள் இந்திய வீரர் ராகுல் திராவிட் தலைமையில் இந்த தேர்வு நடைபெற்றது.
இதில் ரோகித் சர்மா முழு உடல் தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு ஆஸ்திரேலியா செல்ல இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது. வரும் 14ம் தேதி ரோகித் சர்மா ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றார். அங்கு சென்ற பின்னர் 14 நாட்கள் சுய தனிமையில் இருந்தார். இந்தநிலையில் தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக தற்போது இந்திய அணியுடன் இணைந்துள்ளார் ரோகித் சர்மா. அவரை அணி வீரர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்கின்றனர். அப்போது பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ``குவாரன்டைன் எப்படி இருந்தது மை பிரெண்ட்" எனக் கேட்கிறார். இந்த வீடியோவை பிசிசிஐ பகிர்ந்துள்ளது.
ஜனவரி 7-ந்தேதி சிட்னியில் நடைபெற உள்ள நிலையில் அதில் ரோகித் சர்மா விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.