அரசியல் படத்தில் பிக் பாஸ் பிந்து மாதவி
கரு பழனியப்பன் இயக்கதில் அருள்நிதி நடிப்பில் 'புகழேந்தி எனும் நான்’’ அரசியல் படத்தை அவர் அறிவித்த நாளில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த படத்தின் நாயகியாக பிக்பாஸ் பிரபலம் பிந்து மாதவி தேர்வு செய்யபட்டுள்ளார்.
இப்படம் பற்றி நடிகை பிந்து மாதவி கூறும்போது,
"எனக்கு பல பட வாய்ப்புகள் வந்தாலும், நான் சிறந்த கதைகளையே தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கிறேன். நல்ல கதை மட்டுமல்லாமல், நடிக்க வாய்ப்புள்ள நல்ல கதாபாத்திரமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
அப்படி சமீபத்தில் எனக்கு அமைந்த படம் தான் 'புகழேந்தி எனும் நான்'. இது அரசியல் சார்ந்த படம் என்றாலும் என் கதாபாத்திரத்திமும் முக்கியத்துவம் வாய்ந்தது.