சிஏஏ போராட்டத்தில் துப்பாக்கியால் சுட்ட கபில்.. கட்சியில் இணைந்த சில மணி நேரத்தில் நீக்கிய பாஜக!

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லி ஜமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஜனவரியில் பேரணி நடத்தினர். பல்கலைக்கழகத்தில் இருந்து ராஜ்ேகாட் வரை பேரணியாக சென்றனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு(சிஏஏ) எதிராகவும் கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.

அவர்கள், நாட்டு மக்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது அந்த பேரணிக்கு முன்பாக கைத்துப்பாக்கியுடன் வந்த ஒரு நபர், திடீரென மாணவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினார். அவர் சாலையில் பேரணிக்கு முன்பாக வேகமாக சென்று சிறிது தூரத்தில் இருந்து, பேரணியை நோக்கி கைத்துப்பாக்கியால் சுட்டார். அப்போது அவர், நீங்கள் கேட்ட சுதந்திரம் இதோ என்று கத்தினார். துப்பாக்கிச் சூட்டில் சதாப் பரூக் என்ற இதழியல் துறை முதுகலை பட்ட வகுப்பு மாணவர் படுகாயம் அடைந்தார்.

துப்பாக்கியால் சுட்டதாக கூறி கபில் குஜ்ஜார் என்பவர் கைது செய்யப்பட்டார். சில மாதங்களில் இவர் ரிலீஸும் ஆனார். இந்த நிலையில் தான் இந்த கபில் குஜ்ஜார் ன்று பாஜகவில் இணைந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்த நெட்டிசன்கள் பாஜகவை வறுத்தெடுத்தனர். இதனையடுத்து சில மணி நேரங்களிலேயே கபிலை கட்சியிலிருந்து நீக்கம் செய்து பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது.

More News >>