பிரபல நடிகர் மகளுக்கு கொரோனா டெஸ்ட்.. வீடியோ பகிர்ந்து அட்வைஸ் சொன்னார்..

திரையுலகினர் பலர் கொரோனா பாதிப்புக்குள்ளாகினார். பாலிவுட்டில் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்தியா ஆகியோர் கொரோனா பாதிப்புக்குள்ளானார்கள். ஐஸ்வர்யாராயின் 9 வயது மகள் கொரோனா பாதிப்புக்குள்ளானது அதிர்ச்சி ஏற்படுத்தியது. பல நட்சத்திரங்கள் கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக இருங்கள் என்று அடிக்கடி மெசேஜ் பகிர்கின்றனர். ஆனால் பிரபல நடிகர் மகள் ஒருவர் சிறுவர், சிறுமியர்கள் மத்தியிலும் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி அப்ளாஸ் வாங்கி இருக்கிறார். அத்துடன் தனக்கு டெஸ்ட் எடுக்கப்படும் வீடியோவும் பகிர்ந்திருக்கிறார்.

டோலிட் நடிகர் மகேஷ்பாபு மகள் சித்தாரா. இவர் கோவிட் 19 டெஸ்ட் எடுத்துக்கொண்டார். மூக்கு. தொண்டை பகுதியில் எச்சிலும் சளி சேம்புள் எடுக்கப்பட்டது. அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார் சித்தாரா. கொரோனா பாசிடிவா, நெகடிவா என்பது பற்றி சித்தாரா பகிரவில்லை ஆனால் சக பிள்ளைகளுக்கு மெசேஜ் பகிர்ந்திருக்கிறார். அதில்.முதல்முறையாக நான் செய்துகொள்ளும் கொரோனா பரிசோதனை இது. முன்பு இந்த டெஸ்ட் செய்துகொள்வதற்கு தயக்கம் காட்டினேன். ஆனால் என் அம்மா என் அருகிலேயே இருந்தார். அவரது கையை பிடித்துக் கொண்டு இந்த சோதனையை செய்துக் கொண்டேன்.

நண்பர்கள், குடும்பத்தினரைச் சந்திப்பதற்கு முன் நாம் பரிசோதனை செய்துக் கொண்டு பாதுகாப்பாக இருக்கிறோமா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நான் அதை செய்து கொண்டேன். அதன் உண்மையைப் பகிர்கிறேன். இந்த சோதனை தவறாகவோ, கடினமாகவோ. வலியானதாகவோ இல்லை. எனவே நாம் பரிசோதனை செய்துகொண்டு சமூகத்தையும் நம்மையும் பாதுகாப்போம். எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நோய் வரும் முன் காப்பதே சிறந்தது. பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்திருக்கிறார். திரையுலகினர் கூட்டமாக இருந்தே பணி செய்ய வேண்டிய சூழல் உள்ளதால் அங்குத் தொற்று பரவ அதிக வாய்ப்பு இருப்பதால் படப்பிடிப்பில் பங்கேற்பவர்களுக்குத் தினமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நடிகர்கள் சரத்குமார், விஷால், கருணாஸ். ராம் சரண், வருண் தேஜ், நடிகைகள் நிக்கி கல்ராணி, தமன்னா. ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தார்கள்.

More News >>