கீர்த்தி சுரேஷ் வாய்ப்புகளை மடை திருப்பிக்கொண்ட நடிகை..
தமிழில் விஜய்யுடன் சர்க்கார், விஷாலுடன் சண்டக்கோழி 2, சிவகார்த்திகேயனுடன் ரெமோ, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார் கீர்த்தி சுரேஷ். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கிடுகிடுவென திரையுலகில் தனக்கென ஒரு இடம் பிடித்த கீர்த்தி சுரேஷ் இந்தி பட வாய்ப்புக்கு ஆசைப்பட்டு பாலிவுட் சென்றார். உடல் எடை குறைக்றேன் என்று ஒல்லியானதால் இந்தி பட வாய்ப்பும் கை நழுவியது. இதற்கிடையில் அவரது இடத்தை பிரியா பவானி சங்கர் தமிழில் பிடித்திருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். டிவி சீரியல்களில் நடித்து புகழ் பெற்ற பிரியா பவானி சங்கர் மேயாத மான் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். எஸ்.ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர், கார்த்தி நடித்த கடைகுட்டி சிங்கம், அருண் விஜய் நடித்த மாஃபியா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
தற்போது சிலம் பரசன் நடிக்கும் பத்து தல படத்திலும் நடிக்க உள்ளார். இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் பிரியா பவானிக்கு ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிறந்தா நாள் பரிசாக அவர் ராகவா லாரன்ஸுடன் ருதரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். இதனை ராகவா லாரன்ஸ் தான் வெளியிட்ட பதிவில் பகிர்ந்திருக்கிறார். பிரியா பவானிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ருத்ரன் குழுவுக்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்திருக்கிறார். ராகவா லாரன்ஸ் உடன் பிரியா பவானி இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை. இப்படத்தை கே.பி செல்வா இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசை அமைத்து வருகிறார். எஸ்.டி.ஆர் மற்றும் கவுதம் கார்த்திக்கின் பத்து தல படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தை ஒபெலி என் கிருஷ்ணா இயக்குகிறார்.
இதில் பிரியா ஏற்கும் பாத்திரம் பற்றி இயக்குனர் கூறும் போது,இதில் தாசில்தாராக நடிக்கிறார். இதுவொரு வலுவான கதாபாத்திரம். எந்த விஷயத்திலும் துணுச்சலாக முடிவெடுக்கும் குணம் கொண்டவர். துணிச்சலான ஒரு பாத்திரத்தில் அவர் நடிக்கிறார் என்றார். மேலும் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2, எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை, ஹரிஷ் கல்யாணுடன் ஒ மன பெண்ணே, துல்கர் சல்மானுடன் வான், அசோக் செல்வனுடன் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார். ஒரு டஜன் அளவில் கைநிறைய படங்களில் நடிக்கிறார். ப்ரியா பவானி நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். அது புஷ்வானமானது. தற்போது தனது நீண்ட நாள் பாஃபிரண்டுடன் உறவில் உள்ளார். கீர்த்தி சுரேஷை பொருத்த வரை தமிழில் தற்போது அண்ணாத்த, சாணி காகிதம் என் 2 படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.