உலகின் 112 வயதானவருக்கு கின்னஸ் அங்கீகாரம்

உலக சாதனை என்றால் அதன் பெயர் கின்னஸ் சாதனை தான். அது எந்த ஒரு தனி நபரோ, குழுவோ, கூட்டாகவோ, எப்படி இருந்தாலும் உலகிற்கு அது ஒரு புது செயல் என்றால் அதனை அங்கீகரித்து உலகிற்கு இது ஒரு புது முயற்சி அல்லது யாரும் செய்திராத ஒரு பதிவு என்று எடுத்து சாதனை மைல் கல்லாக பதிவு செய்வது கின்னஸ் அமைப்பின் வேலை.  உலகின் பல்வேறு சாதனை பதிவுகளை நிர்வகித்துவரும் கின்னஸ் நிறுவனம்  உலகில் அதிக காலம் வாழ்ந்துவரும் ஆண், பெண்களை அங்கீகரித்து, சிறப்பித்தும் வருகிறது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜீயென்னி லூயிஸ் கால்மென்ட் என்ற பெண் மிக அதிககாலம் உயிர் வாழ்ந்த நபராக 122 ஆண்டுகள் 164 நாட்கள் உயிர்வாழ்ந்து கடந்த 1997-ம் ஆண்டு மரணம் அடைந்தார். அவருக்கு பின்னர் ஜிரோய்மோன் கிமுரா 116 ஆண்டுகள் 54 நாட்கள் உயிர் வாழ்ந்து கடந்த 2013-ம் ஆண்டில் மரணம் அடைந்தவர்தான் கின்னஸ் சான்றுகளின்படி மிக அதிக காலம் வாழ்ந்தவராக கருதப்படுகிறார். உலகின் மிக வயதான நபராக ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரான்சிஸ்க்கோ நுனேஸ் ஒலிவேரா 113-வயது வரை வாழ்ந்து 29-1-2018 அன்று மரணம் அடைந்தார். தற்போது ஜப்பான் நாட்டின் அஷோரா பகுதியில் ‘ஸ்பா’ எனப்படும் அழகு நிலையம் நடத்திவந்த   மசாஸோ நோனாக்கா(112) என்பவரை உலகில் வாழ்ந்து வருபவர்களில் அதிக வயதான ஆண்மகனாக கின்னஸ் நிறுவனம் சான்று அளித்துள்ளது.  விவசாயம் மற்றும் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் ஜப்பான் நாட்டு தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 900 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஹொக்கைடோ தீவில் கடந்த 25-7-1905 பிறந்துள்ளார் என்பதை இவரின் பள்ளி சான்றிதழை வைத்து முடிவு செய்துள்ளனர்.  மசாஸோ நோனாக்காவை கௌரவிக்க இன்று நடத்தப்பட்ட விழாவில் தனது குடும்பத்தாருடன் கலந்து கொண்டார். இவருக்கு இரு மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். இனிப்பு வகைகள் மற்றும் கேக் ஆகியவற்றை விரும்பி உண்ணும் இவரே தற்போது உலகின் மிக வயதானவர் என்று கின்னஸ் சாதனை அமைப்பு சான்று அளித்துள்ளது. மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
More News >>