வலிமை பட ஸ்டில் லீக்.. அஜீத் புது தோற்றம் வைரல்..

நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜீத்குமார் நடித்து வரும் படம் வலிமை. இதனை எச்.வினோத் டைரக்டு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கிற்கு முன் தொடங்கிய நிலையில் கொரோனா ஊரடங்கில் தடைபட்டது. கொரோனா தளர்வில் படப்பிடிப்புகளுக்கு அனுமதி தரப்பட்ட போதும் வலிமை காலதாமதமாகவே படப்பிடிப்பு தொடங்கியது. அஜீத்குமார் ஐதராபாத் சென்று வலிமை படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தார். அப்போது மோட்டார் சைக்கிள் சண்டைக் காட்சியில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் அஜீத்துக்குக் காயம் ஏற்பட்டது. அவர் சிறிது ஓய்வும் சிகிச்சையும் எடுத்துக் கொண்டு மீண்டும் படப் பிடிப்பில் கலந்து கொண்டார்.

அஜீத் நடிக்கும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் தினமும் மெசேஜ் பகிர்ந்த வண்ணம் இருந்தனர். ஆனால் படத் தரப்பிலிருந்து அப்டேட் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் அண்ணாத்த பட அப்டேட் வந்தது, கமலின் விக்ரம் பட தகவல், விஜய்யின் மாஸ்டர் படம் அப்டேட் வந்தது தனுஷின் ஜெகமே தந்திரம் அப்டேட் வந்தது. சிம்புவின் ஈஸ்வரன் படம் அப்டேட் வந்தது வலிமை படத்துக்கு மட்டும் ஏன் வரவில்லை என்று கேட்ட வண்ணமிருந்தனர். ரசிகர்களை அமைதியாக இருக்கும்படி பட தரப்பினர் கேட்டுக்கொண்டனர்.

புத்தாண்டில் அப்டேட் வருமென்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நேற்று வலிமை படத்திலிருந்து ஒரு ஸ்டில் வெளியானது. அதில் அஜீத், மற்றும் உடன் நடிக்கும் சிலர் இருக்கின்றனர். படம் தெளிவில்லாத நிலையிலும் அதை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.வலிமை போலீஸ் கதையென்றாலும் அம்மா செண்டி மெண்ட்டும் படத்தில் உள்ளது. லீக் ஆன படத்தில் அம்மா வேடத்தில் நடிகை சுமித்ரா இருக்கிறார்.

More News >>