புத்தாண்டு தீர்மானம் என்ன? கோவாவிலிருந்து ராஷ்மிகா பதில்..
புத்தாண்டு பிறக்கும் நாளில் இந்த ஆண்டில் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சில சபதங்களை மேற் கொள்வார்கள். 2020ம் ஆண்டின் தொடக்கத்தின் பலரும் இதுபோல் திட்டமிட்டார்கள். ஆனால் அவர்கள் எல்லோர் திட்டத்தையும் கொரோனா வைரஸ் தவிடு பொடியாக்கிவிட்டது. கொரோனா பரவல் குறைந்ததும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இன்னும் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.திரையுலகிலும் ஒவ்வொரு நட்சத்திரங்களும் போட்டு வைத்த திட்டங்களும் வெறும் வார்த்தைகளாகவே முடிந்து விட்டது.
திருமணத்தை இன்னும் ஒரு வருடம் தள்ளிப்போடலாம் எண்ணி இருந்த சில நடிகைகளுக்கு வீட்டில் கொடுத்த அழுத்தம் காரணமாகத் திருமணம் செய்து கொண்டனர். சில நடிகைகளுக்கு ஒப்புக்கொண்டிருந்த பட வாய்ப்புகள் கை நழுவிப் போனது. 2020ல் சம்பளத்தை ஏற்ற எண்ணியிருந்த நடிகர், நடிகைகள் தங்களது சம்பளத்தை குறைக்க வேண்டிய நிலைக்குள்ளாயினர். பெரிய படங்கள் தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளிக்கு ரிலீஸ் திட்டமிடப்பட்டு அதுவும் நிறைவேறவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவைகளில் சில படங்களின் படப்பிடிப்பே முடியவில்லை. இப்படி பட்டியல் போட்டால் இடம் கொள்ளாது.
புத்தாண்டு கொண்டாட்டத்துக்குப் பல நடிகைகள் வெளிநாடு சென்றிருக்கின்றனர்.நடிகை ராஷ்மிகாவும் புத்தாண்டு கொண்டாடத் தனது அரட்டை கேங்குடன் மாலத்தீவு சென்றிருக்கிறார். அவர் இணைய தளம் வழியாக ரசிகர்களின் கேள்விக்குப் பதில் அளிக்கிறார். அவரிடம் 2021ம் ஆண்டில் உங்கள் திட்டம் என்ன என்று கேட்க நொந்துபோனார் ராஷ்மிகா. அவர் கூறும்போது,2020ல் நான் சில தீர்மானங்கள் செய்திருந்தேன் இந்த ஆண்டில் தீர்மானம் எதுவும் இல்லை. நான் தமிழில் சுல்தான் படத்தில் நடிக்கிறேன் அப்படம் ரிலீஸ் ஆனபிறகு எனது அடுத்த தமிழ்ப்படம் பற்றிச் சொல்கிறேன். நான் திரையுலகிற்கு வந்து 4 வருடம் ஆகிவிட்டது. என் வாழ்க்கையில் நிறையச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதில் சிலவற்றை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். நான் தற்போது என்னுடைய நண்பர்கள் கேங்குடன் கோவாவில் இருக்கிறேன் என்றார்.