தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் இல்லை : தலைமை தேர்தல் அதிகாரி
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது :தமிழகச் சட்டமன்றத்திற்கு உரியக் காலத்திலேயே தேர்தல் நடப்படும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு எதுவும் இல்லை.கொரானா தொற்று பரவுதல் என்ற எச்சரிக்கை காரணமாக ஒரு வாக்குச்சாவடியில் அதிகபட்சம் ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விகிதத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியிருப்பதால் தான் அதற்காகத் திட்டமிடப்பட்டு வருகிறது.
கூடுதல் வாக்குச்சாவடி மையங்களை அடையாளம் காண வேண்டி உள்ளதால் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பில்லை.தமிழகத்தில் இதுவரை 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளை, 95 ஆயிரமாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு சத்யபிரதா சாகு தெரிவித்தார்.