அரசு ஊழியர்களுக்கு இனி 33 ஆண்டுகள்தான் வேலை
மத்திய அரசு ஊழியர்களுக்கு இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயது வரையே பணிக் காலம். என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது.அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயது, இதில் எது முதலில் வருகிறதோ அதில் ஓய்வு பெற வேண்டும். இந்த புதிய நடைமுறை வரும் 1.4.2021 முதல் அமுலுக்கு வருகிறது. இதன்படி பணியில் சேர்ந்து 33 ஆண்டுக் காலம் நிறைவு செய்தவர்கள் ஓய்வு பெறுகிறார்கள்.
இது தொடர்பான மசோதாவை மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது. இந்த புதிய சட்டத்தின்படி 22 வயதில் பணியில் சேரும் ஒருவர் தனது 55 வயதில் ஓய்வு பெறவேண்டும். 27 அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் பணிக்குச் சேருவோர் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும். வரும் ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.