பிரதமர் நரேந்திர மோடி உண்ணாவிரதம் அறிவிப்பு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை எதிர்கட்சிகள் முற்றிலுமாக முடக்கி வருவதை கண்டித்து பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் வரும் 12ம் தேதி உண்ணாவிரதம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, எஸ்.சி., எஸ்.டி சட்ட தீர்ப்பு, காவிரி மேலாண்மை வாரியம், வங்கிக் கடன் மோசடி உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து காங்கிரஸ், அதிமுக., தெலுங்குதேசம் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்றும் அமளி நீடித்தது. இதனால், இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்தகுமார் கூறுகையில், “கடந்த 23 நாட்களாக நாடாளுமன்றத்தை முடக்கிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினரின் போக்கை கண்டித்து வரும் 12ம் தேதி பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும். அப்போது, பிரதமர் மோடி உள்பட பாஜக எம்.பி.க்கள் அனைவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் ” என தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com