ஜன1 முதல் பிற நெட்வொர்க்குகளுக்கு பேச கட்டணம் இல்லை: ஜியோ அறிவிப்பு...!
ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கு பேசுவதற்கு ஒரு நிமிடத்திற்கு 6 பைசா ஜியோ நிறுவனம் கட்டணமாக வசூலித்து வந்தது.பிற நெட்வொர்க்குகளுடன் இணைப்புக்கான கட்டணம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் அப்போது அறிவித்தது.கடந்த 2019 செப்டம்பரில் டிராய் அமைப்பு ஐயூசி ( இரு நெட்வொர்க்குகளுக்கு இடையேயான பயன்பாட்டிற்கான கட்டணம் ) கட்டணத்தை நீக்குவதற்கான காலக்கெடுவை 2020 ஜனவரி 1 ஆம் தேதி வரை நீட்டித்தது. அதுவரை ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால்களுக்கு ஒரு நிமிடத்திற்கு 6 பைசா என்ற வீதியில் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியது.
அப்போது, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஐ.யூ.சியை ரத்து செய்யும் வரை மட்டுமே இந்த கட்டணங்கள் அமலில் இருக்கும் என்று ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்திருந்தது.இந்நிலையில், இந்தியாவில் பிற நெட்ஒர்க்களுடன் இணைப்புக்கான கட்டணம் ( interconnect usage charges) நீக்கப்பட்டுவிட்டது. இதைத்தொடர்ந்து ஜியோ நிறுவனம் வாய்ஸ் கால்களுக்கான கட்டணங்களை நீக்கியுள்ளது. இதனால் நாளை முதல் மீண்டும் அனைத்து வாய்ஸ் கால்களையும் இலவசமாகப் பேசலாம் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.