ஜார்கண்ட் மாநிலத்தின் பசல் ரகத் யோஜானா!

மத்திய அரசின் பிரதான் மந்திரி பசல் பீமா யோஜானா திட்டத்திற்கு மாற்றாக, பசல் ரகத் யோஜானா எனும் புதிய பயிரி காப்பீடு திட்டத்தை மாநில திட்டமாக அறிவித்துள்ளது ஜார்கண்ட் மாநிலம்.பிரதான் மந்திரி பசல் பீமா யோஜானா எனும் பயிர் காப்பீடு திட்டம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் நிலப்பரப்புகளுக்கு ஏற்றவாறு காப்பீடு செய்து கொள்ளலாம். இயற்கை அழிவு, மழை பொய்யாமை, அதிக மழை பொழிவு போன்ற சீற்றங்களால் அழிவு ஏற்படும் போது, இந்த காப்பீடு திட்டம் அதற்கான ஈட்டுத்தொகையை அளிக்கும்.

இந்த காப்பீடு செய்ய விவசாயிகள் தங்களின் நில ஆவணம், சிட்டா, அடங்கல் , ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு புத்தகம் கொண்டு இணையம் https://pmfby.gov.in மூலமாகவோ அல்லது இ- சேவை மூலமாகவோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இந்த திட்டத்திற்கு மாற்றாக ஜார்கண்ட் மாநிலம் பசல் ரகத் யோஜானா எனும் பயிர் காப்பீடு திட்டத்தைக் கடந்த 29 டிசம்பரில் வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் இன்னும் மூன்று மாதங்களுக்குள் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த திட்டம் நிலமுள்ள மற்றும் நிலமற்ற விவசாயிகள் அனைவருக்கும் பொருந்தும். மேலும் இந்த திட்டமானது மாநில விவசாய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள திட்டத்தில் காப்பீடு செய்யும் போது, விவசாயிகளுக்கான ஈட்டுத்தொகை சரிவரக் கிடைக்காததால், மாநில அரசு இந்த திட்டத்தை நடைமுறைப் படுத்தியுள்ளது. மேலும் 2018- 2019 ம ஆண்டில் மட்டும் 12.936 இலட்சம் விண்ணப்பங்கள் காப்பீடு செய்யப்பட்டது, அதில் 0. 577 இலட்சம் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே காப்பீடு தொகை வழங்கப்பட்டது. எனவே இனி இந்த காப்பீடு திட்டத்தை மாநில அரசே ஏற்று விவசாயிகளுக்கு உரிய காப்பீட்டை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து மாநில விவசாயிகளின் காப்பீடு விவரங்கள் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/12/2020-11-02---2019-Kharif.pdf

https://tamil.thesubeditor.com/media/2020/12/2020-11-02---2018-19.pdf

https://tamil.thesubeditor.com/media/2020/12/2020-11-02---2017-18.pdf

https://tamil.thesubeditor.com/media/2020/12/2020-11-02---2016-17.pdf

More News >>