உலகின் முதன் முதலாக நியூசிலாந்து நாட்டில் அடியெடுத்து வைத்தது 2021 புத்தாண்டு!
ஆக்லாந்து: உலகின் முதன் முதலாக நியூசிலாந்தில் 2021 புத்தாண்டு பிறந்தது. உலகில் முதலில் நியூசிலாந்து நாட்டில் இந்திய நேரத்தில் இருந்து 7.30 மணி நேரத்திற்கு முன்னதாக சூரியன் உதயமாகிறது. இதன்படி, இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணியளவில் 2021 புத்தாண்டு நியூசிலாந்தில் பிறந்தது. நாட்டிலே முதன் முதலாக நியாலாந்தில் அடிஎடுத்து வைத்த 2021 புத்தாண்டை ஆக்லாந்து மக்கள் கண் கவர் வானவேடிக்கை நிகழ்ச்சிகளுடன் வரவேற்றனர்.
தொடர்ந்து, ஆட்டம், பாட்டம், வானவேடிக்கைகளுடன் நியூசிலாந்து மக்கள் 2021 புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பறிமாறி வருகின்றனர். நியூசிலாந்திற்கு பின்னர் ஆஸ்திரேலியாவில் 2021 இன்று 1 மணி நேரத்தில் புத்தாண்டு பிறக்கவுள்ளது. தொடர்ந்து, வரிசையாக ஜப்பானில் 3 மணி நேரத்திலும், சிங்கப்பூர், மலேசியா 4 மணி நேரத்திலும் புத்தாண்டு பிறக்கவுள்ளது.
இந்தியாவில், இன்னும் 6.30 மணி நேரத்தில் 2021 புத்தாண்டு பிறக்கவுள்ளது. 2020-ம் ஆண்டு மிக மிக கடினமான வருடமாக இருந்ததாக மக்கள் கருதும் நிலையில், 2021-ம் ஆண்டு எப்படி இருக்கும் என்று பொதுமக்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து உள்ளனர்.