ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்... ஐந்து மாத மகன் பிறந்தநாளை கொண்டாடிய ஹர்திக் பாண்டியா!
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, தனது ஐந்து மாத மகன் அகஸ்தியாவின் பிறந்தநாளை கொண்டாடினார். இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா, தனது காதலி நடாஷா ஸ்டான்கோவிக்கை யாருக்கும் சொல்லாமல் நிச்சயதார்த்தம் செய்தார். தொடர்ந்து, கொரோனா ஊரடங்கிற்கு இடையே கடந்த மே 31-ம் தேதி ஹர்திக் பாண்டியா - நடாஷா ஸ்டான்கோவிக் திருமணம் எளிய முறையில் வீட்டிலேயே நடைபெற்றது.
இருப்பினும், திருமணத்திற்கு முன்னதாகவே ஹர்திக் பாண்டியா தனது அதிரடி ஆட்டத்தை தனிப்பட வாழ்க்கையிலும் ஆடியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இதனால், ஹர்திக் பாண்டியாவிற்கு கடந்த ஜூலை 30ம் தேதி ஆட்டநாயகன் விருதுதாக ஹர்திக் பாண்டியாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. அவரது மகன் பிறந்து நேற்றோடு 5 மாதங்கள் நிறைவடைந்தது. இந்நிலையில், நேற்று தனது மகன் அகஸ்தியாவின் ஐந்து மாத பிறந்தநாளை கேக் வெட்டி ஹர்திக் பாண்ட்யா தனது மனைவி நடாஷாவுடன் கொண்டாடியுள்ளார்.
குழந்தை பிறந்ததில் இருந்து அவப்போது சமூக வலைத்தளத்தில் தனது மகனின் படங்களை பகிர்ந்து வந்த ஹர்திக் பாண்டியா பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ஹர்திக் பாண்டியா, “என் பையன் பிறந்து 5 மாதங்கள் ஆகிறது. நானும், நட்டாஷாவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என கேப்ஷன் போட்டுள்ளார்.