பிற நெட்வொர்களுடன் பேச இலவசம்.. ஜியோவின் பக்கா பிளான்.. இது தான் பின்னணியா?!

ஜனவரி 1-ம் தேதி நாளை முதல் ஜியோ நெட்வொர்க்கிலிருந்து பிற நெட்வொர்க்குகளுக்கும் இலவசமாக பேசலாம் என ஜியோ ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோ ரிலையன்ஸ் முதல் முதலில் தனது சேவையை தொடங்கிபோது, அனைத்து அழைப்புகளையும் இலவசமாக வழங்கியது. தொடர்ந்து, ஜியோ சிம் டூ மற்ற தொலைதொடர்வு நிறுவனங்களுடன் பேச கட்டணம் வசூலித்தது. ஜியோ டூ ஜியோ பேச மட்டும் வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவை வழங்கியது.

தற்போது வரை ஜியோ நிறுவனம் பிற நெட்வொர்க்குகளின் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலித்து வருகிறது. இதற்கிடையே, ஜியோ நிறுவனம் அனைத்து இந்தியர்களையும் VoLTE போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களின் வாடிக்கையாளர்களாக மாற்ற வேண்டும் என்று உறுதியாகவுள்ளது.

மேலும், நாங்கள் ஒவ்வொரு பயனர் மீதும் அக்கறை செலுத்துகிறோம். இதனால் தற்போது எங்கள் பயனர்கள் அனைவரும் ஜியோவுடன் இலவச குரல் அழைப்புகளை அனுபவிக்கிறார்கள். ஐ.யூ.சி கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டவுடன், ஆஃப்-நெட் உள்நாட்டு குரல் அழைப்பு கட்டணங்களை பூஜ்ஜியமாக மாற்றுவோம் என்ற உறுதிப்பாட்டை மதித்துள்ள ஜியோ நிறுவனம், 2021 ஜனவரி 1 முதல் தேதி முதல் மீண்டும் அனைத்து ஜியோவிலிருந்து பிற நெட்வொர்க்களுக்கான உள்நாட்டு அழைப்புகளையும் இலவசமாக வழங்கும் என்று அறிவித்துள்ளது. மேலும், ஆன்-நெட் உள்நாட்டு அழைப்புகள் ஜியோ நெட்வொர்க்கில் எப்போதும் இலவசமாக இருக்கும் என்று ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அம்பானி மற்றும் அதானி நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிப்பதாக அதிரடியாக அறிவித்தனர். அதன் ஒருபகுதியாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஜியோ நெட்வொர்க்கை புறக்கணித்து வருகின்றனர். போதாக்குறைக்கு பஞ்சாப், ஹரியானா விவசாயிகளில் தங்கள் மாநிலங்களில் இருந்த நூற்றுக்கணக்கான ஜியோ டவர்களையும் சேதப்படுத்தினர். இது தொடர்பாக ஜியோ மாநில அரசுகளிடம் புகார் அளித்துள்ளது. இதனால் தற்போது கட்டண நீக்க அறிவிப்பை ஜியோ வெளியிட்டு இருக்கிறது என்று பேச்சு எழுந்துள்ளது.

More News >>