தமிழ் பட நடிகர் திடீர் மரணம்.. 2020 வருட இறுதியிலும் ஒரு சோகம்..
சென்ற 2020ம் ஆண்டு பல சோகங்களை திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் ஏற்படுத்தி சென்றிருக்கிறது. 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி புகழ் பெற்ற எஸ்.பி.பாலசுப்ரமணியம், நடிகள் சிரஞ்சீவி சார்ஜா, ரிஷிகபூர், இர்பான் கான், சுஷாந்த் சிங் ராஜ்புத், சீரியல் நடிகை சித்ரா இப்படி இறந்தவர்கள் எண்ணிக்கை பட்டியல் அதிகரித்தது. ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31ம் தேதியும் ஒரு நடிகரின் மரணம் நிகழ்ந்திருக்கிறது. முன்னதாக மறைந்த இந்தி நடிகர் ரிஷி கபூர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதற்காக அமெரிக்கா சென்று சுமார் ஒருவருடம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். அதே போல் நடிகர் இர்பான் கான் புற்று நோய் பாதித்து அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். இவர்கள் இருவரும் கொரோனா கால கட்டத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தனர். இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அதேபோல் கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவும் திருமணம் ஆகி ஒரு வருடம் கடந்த நிலையில் மாரடைப்பில் மரணம் அடைந்தார். அவர் இறக்கும்போது கர்ப்பமாக இருந்த அவரது மனைவியும் நடிகையுமான மேக்னா ராஜுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் குழந்தை பிறந்தது. மேலும் கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தில் சந்தனாத்துடன் இணைந்து நடித்த டாக்டர் சேதுவும் கொரோனா கால கட்டத்தில் மாரடைப்பில் மரணம் அடைந்தார். தனது லட்சியமாக சென்னையில் பெரிய மருத்துவமனை ஒன்றை அவர் கட்டி வந்தார். அது முடிவடைவதற்குள் சேது மரணம் அடைந்தார். சமீபத்தில் தான் அதன் பணிகள் நடந்து முடிந்தது. நடிகர் சந்தானம், மருத்துவமனையை திறந்து வைத்தார். பின்னணி பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் மரணமும் எதிர்பாராத நிகழ்வாகவே அமைந்தது.
தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அவரே வீடியோவில் தகவல் வெளியிட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அடுத்த ஒரு சில நாளில் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. சிகிச்சையில் அவருக்கு கொரோனா தொற்று குணம் ஆனது ஆனால் நுரையீரல் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பலனில்லாமல் மரணம் அடைந்தார். தமிழில் பாட்ஷா, குருவி, லாடம், ஆட்ட நாயகன், ராஜபாட்டை, பூஜை போன்ற படங்களில் நடித்ததுடன் தெலுங்கில் தாகூர், துளசி, லக்ஷ்மி, பண்ணி, மாஸ் உள்ளிட்ட 300 படங்களில் காமெடி, வில்லன், குணசித்ர வேடங்களில் நடித்தவர் நரசிங் யாதவ். (வயது 52). கடந்த சில காலமாக இவர் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிபட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை நேற்று மோசமானது. மூச்சு விட சிரமப்பட்டார். பிறகு மரணம் அடைந்தார்.