108 மெகாபிக்ஸல் காமிராவுடன் ஜனவரி 5ம் தேதி அறிமுகம் ஆகிறது மி 10ஐ ஸ்மார்ட்போன்
ஸோமி நிறுவனம் புத்தம் புதிய 108 மெகாபிக்ஸல் தரத்துடன் கூடிய காமிராவை கொண்டுள்ள மி 10ஐ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. ரெட்மி நோட் 9 5ஜி வகை போனின் புதிய வணிக வடிவமாக இது கருதப்படுகிறது. ஆனால் புத்தம் புதிய வகை காமிராவுடன் இந்திய வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட்போன் இது என்று ஸோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2021 ஜனவரி 5ம் தேதி மி 10ஐ அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மி 10ஐ ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:தொடுதிரை: 6.67 அங்குலம்இயக்கவேகம்: 6 ஜிபிசேமிப்பளவு: 128 ஜிபி (512 ஜிபி வரை கூடுதலாக்கிக்கொள்ளலாம்)முன்புற காமிரா: 16 எம்பிபின்புற காமிரா: 108 எம்பி + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பிபிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 750ஜிஇயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10மின்கலம்: 4820 mAh (33W பாஸ்ட் சார்ஜிங் வசதி) 4ஜி VoLTE, வைஃபை, மொபைல் ஹாட்ஸ்பார்ட், வி5.0 புளூடூ, ஏ-ஜிபிஎஸ், என்எஃப்சி, டைப்-சி யூஎஸ்பி ஆகிய வசதிகள் கொண்டது.