சாமியார்களுக்கு மந்திரி பதவி - எட்டாவது அதிசயம் என எதிர்கட்சி கிண்டல் நீதிமன்றம் நோட்டிஸ்

5 சாமியார்களுக்கு மந்திரி அந்தஸ்து வழங்கப்பட்டது தொடர்பாக பதிலளிக்கும்படி மத்தியப் பிரதேச பாஜக அரசுக்கு, அம்மாநில நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 5 சாமியார்களுக்கு “மந்திரி பதவிக்கு உரிய அந்தஸ்து” அளிப்பதாக பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அண்மையில் அறிவித்தார்.

நர்மதா நதி பாதுகாப்பு விஷயத்தில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த 5 சாமியார்களும் உதவி செய்வார்கள்; மரம் நடுதல், தண்ணீர் சிக்கனம், நர்மதை நதியைச் சுத்தமாக வைத்திருத்தல் போன்றவற்றில் உதவுவார்கள் என்ற அடிப்படையில், இந்த அந்தஸ்தை அளித்ததாகவும் சவுகான் கூறினார்.

இதன்படி, கம்ப்யூட்டர் பாபா, யோகேந்திர மகந்த், நர்மதானந்தா, ஹரிகரானந்தா, பாபாயு மகராஜ் ஆகிய 5 சாமியார்கள் மந்திரி அந்தஸ்தில் வலம் வந்தனர். ஆனால், பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர்களே சிவராஜ் சிங் சவுகானின் இந்த நடவடிக்கையை விமர்சித்தனர்.

“சாமியார்களுக்கு மந்திரி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது எட்டாவது அதிசயம்” என்று அக்கட்சியைச் சேர்ந்த பாபுலால் கௌர் விமர்சித்தார்.

இந்நிலையில், மாநில அரசின் இந்த முடிவுக்கு எதிராக மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சவுகான் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>