25ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தம் : ரிலையன்ஸ் ரீடைல் மீது அமேசான் புகார்
கடந்த ஆண்டில் இந்திய சில்லரை வர்த்தக சந்தையில் மிகமுக்கியமான வர்த்தக ஒப்பந்தமாக விளங்கும். ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் பியூச்சர் குரூப் இடையே 24 ஆயிரத்து 713 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் ஒப்பந்தம் பல்வேறு பிரச்னைகளால் முழுமையாக நிறைவேறவில்லை. எல்லாம் நிறைவேறும் தருணத்தில் இரு நிறுவன சொத்துப் பரிமாற்றம் குறித்த செபியின் ஒப்புதல் கிடைக்கவில்லை. காரணம் அமேசான். அமேசான் புளியிட்ட ஒரு அறிவிப்பால் செபி தனது முடிவை அறிவிக்கவிக்க முடியவில்லை. இரு நிறுவனங்கள் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் பியூச்சர் குரூப் தனக்கான உரிமையை மீறி முறைகேடாகச் செய்துள்ளது என அமேசான் குற்றம் சாட்டியுள்ளது.
இதற்காக அமேசான் சிங்கப்பூர் நடுவர் அமைப்பில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரையில் செபி இந்த ஒப்பந்தம் குறித்த முடிவுகளைச் அறிவிக்கக் கூடாது என அமேசான் நிறுவனம் செபி அமைப்பிற்குக் கடிதம் அனுப்பியுள்ளது. அக் கடிதத்தில், சிங்கப்பூர் நடுவர் அமைப்பின் உத்தரவுகள் இந்தியச் சட்ட திட்டத்தின் படி இந்தியாவில் செல்லுபடியாகும். இதை டெல்லி உயர் நீதிமன்றமே தெரிவித்துள்ளது. எனவே இந்த ஒப்பந்தம் குறித்த இறுதி ஒப்புதல் அளிக்கும் முன் சிங்கப்பூர் நடுவர் அமைப்பின் இறுதித் தீர்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் டெல்லி உயர் நீதிமன்றமும் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் ஒப்பந்தத்தில் பிரச்சனை இருந்தால் அதற்காக முறையிடுவதற்கும், வழக்கு தொடுப்பதற்கும் அமேசானுக்கு தடை இல்லை. சுதந்திரமாக செயல்படலாம் என அறிவித்தது. இந்த அறிவிப்புதான் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டு பண்ணியிருக்கிறது. பியூச்சர் குரூப் கடுமையான நிதிநெருக்கடி மற்றும் விற்பனை மந்த நிலையில் இருந்தபோது இக்குழுமத்தின் கிளை நிறுவனமான பியூச்சர் கூப்பன் நிறுவனத்தில் அமேசான் சுமார் 1,500 கோடி ரூபாய் முதலீடு செய்தது. இதன் மூலம் 49 சதவீத பங்குகளைக் அமேசான் நிறுவனம், கைப்பற்றியது.
மேலும் மறைமுகமாக 7.3 சதவீத பங்குகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. இந்தப் பியூச்சர் ரீடைல் நிறுவனத்தின் கீழ் தான் உணவு மற்றும் மளிகை பொருட்களின் வர்த்தகம், பிக் பஜார் மற்றும் ஈசிடே ஆகிய நிறுவனங்கள் இயங்கி வருகிறது. அமேசான் - பியூச்சர் குரூப் ஒப்பந்தத்தில் அமேசான், பியூச்சர் கூப்பன்ஸ் நிறுவனத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் உட்பட 7 நிறுவனங்களை குறிப்பிட்டு அந்த நிறுவனங்களின் பங்குகளை விற்க அல்லது கைப்பற்றவோ கூடாது எனக் குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த இந்த ஒப்பந்தம் தான் புதிய ஒப்பந்தத்திற்கு வேகத் தடையாக அமைந்துவிட்டது.