வீறு கொண்டனர் மக்கள்: விரட்டியடித்தனர் எம்எல்ஏவை

சேலம் அருகே எந்த பணிகளையும் செய்ய முன்வராத ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த போது பொதுமக்கள் அவரை கேள்விகளால் திணறடித்து திருப்பி அனுப்பினர். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி சின்னமசமுத்திரத்தில் உள்ள ஏரியில் தண்ணீர் நிரம்பி உபரிநீர் வெளியே செல்ல வேண்டி புத்தாண்டு தினமான இன்று பூஜை நடத்த முடிவு செய்யப்பட்டது. தொகுதி எம்எல்ஏவான சின்னதம்பி இந்த பூஜையில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தார். இன்று மதியம் இந்த பூஜையில் கலந்து கொள்ள அவர் தனது ஆதரவாளர்களுடன் காரில் வந்தார்.

அப்போது அந்தப் பகுதியில் மக்கள் எம்எல்ஏ சின்னத்தம்பியை வழிமறித்தனர். புறப்பகுதியில் முறையான அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. எம்எல்ஏவாக இருந்தும் ஏன் செய்யவில்லை என்று சரமாரியாக கேள்வி கேட்டனர். பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறிய சின்னத்தம்பி தனது ஆட்களுடன் காரில் ஏறி பறந்தார் . இதன் காரணமாக அந்த பூஜையில் அவர் பங்கேற்கவில்லை. எம்எல்ஏ இல்லாமலேயே திட்டமிட்டபடி கிராம மக்கள் பூஜையை நடத்தி முடித்தனர்.

More News >>