உதவி செய்த நடிகரின் பெயரை குழந்தைக்கு வைத்த அம்மா..

பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்க அந்த காலத்தில் பெரியவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பார்கள். இல்லாவிட்டால் தலைவர்களிடம் கொடுத்து பெயர் வைக்க கேட்பார்கள். இப்போதெல்லாம் புதுமையாக என்ன பெயர் வைக்கலாம் என்று கூகுலில் தேடுகிறார்கள். ஆனால் இங்கு ஒரு தாய் தன் குழந்தைக்கு தனது சிகிச்சைக்கு உதவிய நடிகரின் பெயரை வைத்திருக்கிறார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தபோது அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டி லட்சக்கணக்கானவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தவர் சோனு சூட். அத்துடன் வட நாட்டில் தூரமாக இருக்கும் பள்ளிக்கு செல்லாமல் படிப்பை பாதியில் நிறுத்திய கிராமத்து மாணவர்கள் அனைவருக்கும் சைக்கிள் வாங்கி தந்தார். மாடுகள் வாங்க முடியாததால் மகள்களை கொண்டு ஏர் உழுத விவசாயிக்கு டிராக்டர் வாங்கித் தந்தார். இப்படி அவர் செய்த உதவி கணக்கில்லாமல் நீண்டது. இதையடுத்து ஆந்திராவில் ஒரு கிராமத்தில் சோனு சூட்டுக்கு கோயில் கட்டினார்கள்.

இந்நிலையில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவத்துக்கு பிறகு தனக்கு பிறந்த குழந்தை மிகவும் எடை குறைவாக ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், குழந்தை காப்பாற்ற உதவும்படியும் கேட்டு டிவிட்டரில் மெசேஜ் செய்திருந்தார், அதைப்பார்த்த சோனு சூட், மருத்துவரிடம் பேசி இருக்கிறேன் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்றார். முறையான சிகிச்சைக்கு பிறகு அக்குழந்தை காப்பாற்றப்பட்டு தாயார் டிஸ்சார்ஜ் ஆனார். பிறந்த குழந்தைக்கு சோனு என அந்த தாயார் பெயரிட்டிருக்கிறார். இந்த தகவலை அவர் சோனுவுக்கும் தெரிவித்தார். நல்லபடியாக குழந்தையை காப்பாற்றிய டாக்டருக்கு சோனு சூட் நன்றி தெரிவித்துள்ளார்.

More News >>