மது விருந்துடன் இயக்குனர் கொண்டாட்டம்..
புத்தாண்டை பலரும் பலவகையில் கொண்டாடினார்கள். பலர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்கள். பலர் வீட்டில் அல்லது நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் விருந்து சாப்பிட்டனர். பல நட்சத்திரங்கள் ஜோடியாக வெளி நாடு, வெளியூர்களுக்குச் சென்றனர். அதுபோல் இயக்குனர் ஒருவர் தன் படத்தில் நடிக்கும் ஹீரோயினுடன் மது விருந்து பகிர்ந்து புத்தாண்டை கொண்டாடி அதை வீடியோவாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
இந்த வில்லங்கத்தைச் செய்திருப்பவர் சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா. எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் அவர்களைப் பற்றி கமெண்ட் பகிர்வது விமர்சிப்பது எனத் தனது சர்ச்சை பணியை தொடர்கிறார் வர்மா. அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் முதல் பவன் கல்யாண் வரை அவர் வம்பிழுத்திருக்கிறார். ஒரு காலத்தில் அவரது படங்களுக்கு வரவேற்பு இருந்தது. பிறகு அந்த மவுசு குறையத் தொடங்கியதும் பி கிரேட் எனப் படம் கவர்ச்சி படங்களை உருவாக்கத் தொடங்கி தற்போது அதில் கைதேர்ந்தவராகி இருக்கிறார். உச்சபட்சமாக வெளிநாட்டு ஆபாச நடிகை மல்கோவா என்பவரை அழைத்து வந்து ஜி எஸ்டி என்ற படத்தை இயக்கினார்.
சமீபகாலமாக அவர் ஒடிடிக்காக கிளுகிளுப்பு படங்கள் இயக்கியும் தயாரித்தும் வெளியிட்டு வருகிறார். தற்போது புருஸ்லி நினைவாக ஃபைட்டர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் மார்ஷல் ஆர்ட்ஸில் பயிற்சி பெற்ற பூஜா பஹலெகர் ஹீரோயினக நடிக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த டீஸர் காட்சிகளை வர்மா வெளியிட்டார். அதில் தவறான கோணங்களில் கேமரா வைத்து பூஜா பயிற்சி செய்யும் காட்சிகளை படுகவர்ச்சியாக பகிர்ந்தார்.ராம் கோபால் வர்மாவுக்கு குடும்பம் ஒருபுறம் இருந்தாலும் இவர் தனியாகத் தங்கி இருந்து நினைத்தபடியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். தன்னைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை.
ஆனால் தனது ஒரிஜினாலிட்டியை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார். புத்தாண்டைக் கொண்டாடத் தனது படத்தில் நடிக்கும் பூஜா பஹலெகர் உடன் கோவா சென்றார். அங்கு ஓட்டல் ஒன்றில் தங்கியவர் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் மொட்டை மாடிக்குச் சென்று மது விருந்துடன் கொண்டாட்டம் போட்டார். தன் அருகில் பூஜாவை கவர்ச்சி உடையில் அமர வைத்து அவரை இறுக்கமாகக் கட்டிப்பிடித்தபடி மற்றொரு கையில் கிங் சைஸ் மது கோப்பையை எடுத்துப் பருகுவது போல் பாவனை செய்தார். அதை வீடியோவாக டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தும் இருக்கிறார். இது பரபரப்பாக வலம் வந்துக்கொண்டிருக்கிறது.