நட்சத்திர ஓட்டல் ஹாலில் நடிகருக்கு முத்தமிட்ட நடிகை..
2020ல் பட்ட கொரோனா பாதிப்பை மறக்கப் பல நடிகர், நடிகைகள் ஜோடி ஜோடியாக வெளிநாடு மற்றும் வெளியூர்களுக்கு புத்தாண்டு கொண்டாட சென்றனர். நடிகர்கள் ரன்பீர்கபூர்-அலியா பட், தீபிகா படுகோனே-ரன்வீர் சிங், நிஹாரிகா-சைதன்யா போன்றவர்கள் மாலத்தீவுக்குச் சென்று புத்தாண்டு கொண்டாடினர். நடிகர் விஜய் தேவர கொண்டா, நடிகை ராஷ்மிகா போன்றவர்கள் கோவாவிற்குச் சென்றனர்.
அதேபோல் நடிகர் நாக சைதன்யா. சமந்தா ஜோடி கோவா சென்றனர். அங்குப் பல இடங்களில் சுற்றித் திரிந்து பொழுதைக் கழித்தனர். புத்தாண்டு பிறந்ததும் தாங்கள் தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலின் ஹாலுக்கு வந்தனர். நாக சைதன்யாவை இறுக்கமாக கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டார் சமந்தா. ரொமான்டிக்கான அக்காட்சி இருவரின் நேசத்தை வெளிப்படுத்தியுள்ளதாக நெட்டிஸன்கள் கமெண்ட் பகிர்ந்திருக்கின்றனர்.
சமந்தா-சைதன்யா கடந்த நவம்பர் மாதம் ஜோடியாக மாலத்தீவு சென்றனர். அங்குக் கடலுக்கு அடியில் ஸ்கூபா டைவிங் செய்த சமந்தா, கடலுக்கு நடுவே ரெஸ்டாரண்ட் அனுபவம் எனப் பல பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபட்டார். அங்கிருந்து இந்தியா திரும்பிய பிறகு விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பில், சமந்தா கலந்துகொண்டார். மேலும் ஒடிடி தளத்தில் பிரபலங்களை நேரில் அழைத்து சாம் ஜாம் என்ற நிகழ்ச்சியும் நடத்தி வருகிறார். மேலும் சமந்தா நடித்துள்ள பேமலிமேன் ஒடிடி தள தொடர் இந்த மாதம் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.
நாக சைதன்யா லவ் ஸ்டோரி மற்றும் தேங்க் யூ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக மாலத்தீவிலிருந்து திரும்பிய சமந்தா கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்குத் தயாரானார். தனது வீட்டில் கிறிஸ்துமஸ் மரத்தைத் தானே தோழிகளுடன் சேர்ந்து உருவாக்கி அலங்கரித்தார். நாக சைதன்யாவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடினார்.