மாநகராட்சி அதிகாரிகள் நடுரோட்டில் குத்தாட்டம்: வைரல் வீடியோ
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் சாலையை மறித்து நடனமாடிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் கயாத் நகர் மாநகராட்சி அதிகாரி எஸ்.திருமலா ரெட்டி தன்னுடன் பணிபுரியும் அதிகாரிகளுடன் இணைந்து சொகுசு காரில் சென்றுள்ளார். அப்போது, ஸ்ரீசைலாம் நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது அனைவரும் திடீரென காரை நிறுத்திவிட்டு நடுரோட்டில் இறங்கி நடனம் ஆடினர்.இதை யாரோ வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com