விஸ்வரூபம் பட நடிகை தாய் ஆனார்..
கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் பூஜா குமார். இவர் இப்போது ஒரு பெண் குழந்தைக்கு அம்மா ஆகி இருக்கிறார். அமெரிக்காவில் வசிக்கும் நடிகை பூஜா, சமீபத்தில் நவ்யா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார், மகிழ்ச்சியான இந்த தகவலை அவரது கணவர் விஷால் ஜோஷி பகிர்ந்துள்ளார்.அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறும்போது, "ஒரு காலத்தில் நாங்கள் இருவராக இருந்தோம், இப்போது நாங்கள் மூன்று பேராகி இருக்கிறோம். பூஜாவும் நானும் எங்களின் சிறிய பெண் குழந்தை நவ்யா ஜோஷியை உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்த மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
பூஜாகுமார் என் வாழ்க்கையில் சிறந்த பங்குதாரர். எனது இந்த பிறந்தநாளைச் சிறந்த பிறந்த நாளாக மாற்றியுள்ளார் பூஜா என்றார். மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் படத்தைக் கணவர் பகிர்ந்துகொண்டார்.முன்னாள் மிஸ் இந்தியா யுஎஸ்ஏ, பூஜா குமார், 2000 ஆம் ஆண்டு காதல் ரோஜாவே திரைப்படத்தில் கோலிவுட்டில் அறிமுகமானார், 2013 ஆம் ஆண்டில் ஆக்ஷன் த்ரில்லர் விஸ்வரூபத்தில் கமல்ஹாசனுடன் ஜோடியாக நடித்தபோது புகழ் பெற்றார். பின்னர் நடிகை கமலுடன் மீண்டும் விஸ்வரூபம் 2 மற்றும் உத்தம வில்லன் ஆகிய படங்களில் இணைந்து நடித்தார்.
2016 ஆம் ஆண்டு காமெடி படமான மீன் குழம்பும் மண் பானையும் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இதில் அவர் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார், மேலும் இயக்குனர் வசந்த் எஸ் சாயின் சிவராஞ்சினியும் இன்னும் சில பெண்களும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை.மேன் ஆன் லெட்ஜ் மற்றும் ப்ராவல் இன் செல் பிளாக் 99 போன்ற ஹாலிவுட் படங்களில் பூஜா நடித்திருக்கிறார். கடந்த 2018 ஆண்டு பூஜா குமார் நடித்ததோடு சரி அதன் பிறகு 2 வருடமாக புதிய படங்கள் எதிலும் நடிக்காமலிருக்கிறார். முன்னதாக அவர் கமல்ஹாசன் 65வது பிறந்த நாள் கடந்த 2019ம் ஆண்டு பரமக்குடியில் கொண்டாடினார். அப்போது நடிகை பூஜா குமார் கமலின் குடும்ப விழாவில் கலந்துக்கொண்டார். அவர் கமல் குடும்பத்துடன் இருக்கும் படங்கள் அப்போது வைரலானது.