விஜய் சேதுபதி-புதுபட அப்டேட்
ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி – கவுதம் கார்த்திக் இணைந்து நடித்து வரும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’.
இந்த படத்தில் நாயகியாக நிகாரிகா கொனிதலா அறிமுகமாகிறார். ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் டீசர் வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.