பாமக போராட்டம்: ரயில் மீது ஏறிய நிர்வாகி மின்சாரம் தாக்கி பலி (வீடியோ)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பாமக நடத்திய போராட்டத்தில் ரயில் மீது ஏறிய நிர்வாகி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக, பாஜகவை தவிர பெரும்பாலான கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் எதிரொலியாக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாசாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டக்களத்தில் குதித்தனர். இதனால், போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். போராட்டம் தீவிரமடைந்ததால் அண்ணாசாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் இன்று காலை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை போலீசார் கைது செய்ததை தொடர்ந்து, திண்டிவனத்தில் பாமகவினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் ரயிலின் மீது ஏறி எதிர்ப்பு முழக்கங்களை தெரிவித்தபடி நடந்தனர். இதில், ஒருவர் உயர் மின்சாரம் தாக்கி ஒருவர் தீயில் பொசுங்கினார்.

இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, பாமக நிர்வாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தால் பாமகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>