பூசாரி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
தமிழகத்தில் இன்னும் நான்கு மாதங்களுக்குப் பிறகு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை அரசியல் கட்சிகள் இப்போதே துவங்கிவிட்டன.என்று திமுக தீவிரமாகக் களமிறங்கி இருக்கிறது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதி முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக 180 இடங்கள் வரை வெற்றி பெறும் என சாமி உத்தரவிட்டதாகப் பூசாரி ஒருவர் போஸ்டர் அச்சடித்து ஒட்டி இருக்கிறார்.
இந்த போஸ்டரை வைத்துக் கொண்டு ஆண்டவனே உத்தரவு கொடுத்தாச்சு.. அடுத்து திமுக ஆட்சி தான் என்று திமுக தொண்டர்களும் கடவுளை நம்பாத நீங்கள் இதை மட்டும் எப்படி நம்புகிறீர்கள் என்று பதிலுக்கு அதிமுக தொண்டர்களும் லாவணி பாடி வருகின்றனர். உசிலம்பட்டி வட்டாரத்தின் லேட்டஸ்ட் டாக் இந்த போஸ்டர் தான்.