ஸ்ரீலீக்ஸ் அதிரடி - ராணா தம்பியுடன் நெருக்கம் சொன்னபடியே வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சொன்னபடியே பிரபல தயாரிப்பாளரின் மகனும், தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ராணா டகுபதியின் தம்பியுமான அபிராம் டகுபதியுடன் தான் நெருக்கமாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுக்கும் பிரபலங்களின் பெயர்களை ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடுவேன் என்று தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி மிரட்டி வந்தார்.
அதன்படி முதன்முதலாக அரைகுறையாக ஒருவரது முகம் தெரியும்படியான ஒரு புகைப்படத்தை ஸ்ரீலீக்ஸில் வெளியிட்டார். தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் ‘நீ எங்கே என் அன்பே” என்ற பெயரிலும், தெலுங்கில் ‘அனாமிகா’ என்ற பெயரிலும் வெளியான படத்தை டைரக்டு செய்த பிரபல தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலு மீதும்வும் ஸ்ரீலீக்சில் சிக்கி உள்ளார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை டைரக்டர் சேகர் கம்முலு மறுத்து இருந்தார். ஆனால் தொடர்ந்து ஸ்ரீரெட்டி மீது குற்றம் சுமத்தி வந்தார். இந்த குற்றச்சாட்டிற்கு தெலுங்கு திரையுலகினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து தெலுங்கு திரையுலகில் இவர் நடிப்பதற்கான உரிமத்தினை தெலுங்கு திரையுலகம் ரத்து செய்தது.
இந்நிலையில் தெலுங்கு திரைப்பட துறையின் இந்த முடிவினை எதிர்த்தும், தனக்கு நியாயம் வேண்டும் என கோரியும் போராட்டத்தில் ஈடுப்பட்டார். ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கு திரைப்பட அலுவலகத்துக்கு வந்தார். திடீரென தனது ஆடைகளை களைந்து அரை நிர்வாணக் கோலத்தில் அலுவலகத்தின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து பிரபல தயரிப்பாளரின் மகன் அடிக்கடி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர் மகன் தொடர்பான புகைப்படங்களை விரைவில் வெளியிடுவேன் என்றும் கூறிய பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், பிரபல தயாரிப்பாளரான டகுபதி சுரேஷ் பாபுவின் மகனும், தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ராணா டகுபதியின் தம்பியுமான அபிராம் டகுபதியுடன் தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com