துணை முதல்வருடன் சனிபகவான் கோயிலுக்கு சென்ற ஹீரோ..
அந்த காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி, நம்பியார் போன்ற பெரிய நடிகர்கள் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தனர். எம்ஜிஆர் மூகாம்பிகை அம்மன் பக்தர். சிவாஜி வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஒட்டியே விநாயகர் கோவில் உள்ளது. ஷூட்டிங் புறப்படும் போது அந்த கோயிலில் கும்பிட்டுவிட்டுத்தான் புறப்படுவார். நம்பியார் ஐயப்ப பக்தர் வருடா வருடம் தவறாமல் சபரிமலை செல்வார். பின்னாளில் குருசாமியாக இருந்து அமிதாப்பச்சன் ரஜினிகாந்த் போன்ற பல நட்சத்திரங்களைச் சபரிமலை அழைத்துச் சென்றிருக்கிறார்.
ரஜினிகாந்த் தனது ஒவ்வொரு படம் முடிந்ததும் ஆன்மிக பயணமாக இமயமலை சென்று திரும்புவார். அந்த வகையில் தற்போது நடிகர் சிம்பு தனது சிந்தனைய ஆன்மிகத்தின் பக்கம் திருப்பி இருக்கிறார். சமீபத்தில் அவர் சபரிமலை சென்றார். கோ பூஜை செய்தார். புத்தாண்டையொட்டி சிம்பு தனது நண்பரும் நடிகருமான மஹத் ராகவேந்திராவுடன் காசி விஸ்வாநாதர் கோயில் சென்று சாமி கும்பிட்டார். தற்போது மற்றொரு ஆக்ஷன் ஹீரோ கோயில் சென்று தரிசனம் செய்திருக்கிறார். அதுவும் துணை முதல்வருடன் சென்றுள்ளார்.
கேஜிஎஃப் பட ஹீரோ யஷ் நேற்று கர்நாடக துணை முதல்வர் சி.என்.அஸ்வத் நாராயணனுடன் தமிழ் நாட்டின் புகழ்பெற்ற திருநள்ளார் சனீஸ்வரன் கோயிலுக்கு விஜயம் செய்தார். கோயிலில் அவர்கள் சாமிகும்பிடும் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. விரைவில், யஷ் ஐதராபாத்தில் கேஜிஎஃப்: அத்தியாயம் 2 படப்பிடிப்பில் இணைய உள்ளார். பிரசாந்த் நீல் இயக்கும் இப்படம் 2021 ஆம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாகிறது.ஐதராபாத்தில் படப்பிடிப்பிலிருந்த யஷ் கடந்த டிசம்பர் 20 அன்று பெங்களூருக்கு திரும்பினார். அவர் நகரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு இரண்டு வாரங்கள் தனிமைப் படுத்தப்படுத்திக் கொண்டார். பின்னர், யஷ் மற்றும் கர்நாடக துணை முதல்வர் சி.என்.அஸ் வத்நாராயண் உடன் தமிழ் நாட்டின் திருநள்ளார் கோவிலுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டார்.
திருநள்ளாரில் உள்ள சனீஸ்வரன் கோயில் தமிழ் நாட்டில் மிகவும் பிரபலமானது. யஷ் மற்றும் அஸ்வத் நாராயண் ஆகியோர் கோயிலில் சிறப்புப் பூஜை செய்து பூசாரியிடம் ஆசீர்வாதத்தையும் பெற்றனர்.ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் கேஜிஎஃப்: அத்தியாயம் 2 படப்பிடிப்பை யஷ் மீண்டும் தொடங்க உள்ளார். ஜனவரி மத்தியில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர். க்ளைமாக்ஸ் காட்சிகளைப் படமாக்கத் திரைப் பட நகரத்தில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டிருக்கிறது.