ரஜினிகாந்த் வீட்டுக்கு வந்த சாமியார்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மாதம் தனது பிறந்த நாளை கொண்டாடிவிட்டு ஹைதராபாத்தில் நடந்த அண்ணாத்த ஷூட்டிங்கில் பங்கேற்கச் சென்றார். சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். சுமார் 14 மணி நேரம் தினமும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்நிலையில் படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருந்தார். திடீரென்று அவருக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 3 நாள் சிகிச்சை பெற்றவர் பிறகு டிஸ்சார்ஜ் ஆகி சென்னை திரும்பினார். அரசியல் கட்சி அறிவிப்பு வெளியிடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் அரசியலுக்கு வரவில்லை என்னை மன்னித்து விடுங்கள் என்று பகிரங்கமாக அறிவித்தார். ரஜினிகாந்த் உடல்நிலையைக் கருதி டாக்டர்கள் அவரை முழு ஓய்வில் இருக்கக் கேட்டுக் கொண்டனர். அவரும் அதனைப் பின்பற்றி வருகிறார்.

ரஜினிகாந்த் ஆன்மிகவாதியாக மாறி பலகாலம் ஆகிவிட்டது. அடிக்கடி இமயமலை சென்று அங்குள்ள ரிஷிகளைச் சந்தித்து ஆசி பெறுகிறார். பெரிய ஆசிரமம் ஒன்றையும் இமய மலைப் பகுதியில் ரஜினி கட்டி வருவதாகக் கூறப்படுகிறது. திருவண்ணாமலை கோவில், ராகவேந்திரா கோயிலுக்கு அவ்வப்போது செல்வது வழக்கம்.இந்நிலையில் ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்திற்கு நமோ நாராயணா சுவாமி வருகை தந்திருந்தார். அவரை ரஜினிகாந்த்தும் ,லதா ரஜினிகாந்த்தும் வரவேற்றனர். ரஜினியை ஆசிர்வதித்த சுவாமி சற்று நேரம் ரஜினியுடன் பேசிக் கொண்டிருந்தார். இந்த சந்திப்பில் ரஜினியின் உடல் நலம் குறித்து சுவாமி விசாரித்து அவருக்கு நல்லாசி வழங்கினார். இந்த புகைப் படம் நெட்டில் பரவி வருகிறது.

More News >>