காதி கிராம பொருட்கள் இனி ஆன்லைனிலும் ..

காதி மற்றும் கிராம கிராமத் தொழில்துறை மூலம் நாடெங்கும் காதி பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது ஆனால் நாகரிக உலகில் இந்த பொருளுக்கு மிகப்பெரிய வரவேற்பு இல்லை. சுதேசி பொருட்களை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் காதி கிராமத் தொழில் தயாரிப்புகள் எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை இதுவும் அத்தகைய பொருள்களின் விற்பனை அதிகரித்தால் அதற்கு ஒரு காரணம்.இந்த நிலையில் இத்தகைய பொருட்களை எல்லா மக்களுக்கும் கிடைக்கச் செய்ய ஆன்லைனில் உங்கள் பணியைத் தொடங்கி இருக்கிறது காதி கிராம தொழில் நிறுவனம்.

கிராம மக்களின் திறன்களைக் கொண்டு செல்லும் முயற்சியாகப் புதிய ஈகாமர்ஸ் தளம் உருவாக்கியுள்ளது.இந்த இணைய தளத்தில் ஆடை முதல் வீட்டு அலங்கார பொருட்கள் வரை சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்காகப் பட்டியலிடப்பட்டு உள்ளது. இந்தியாவில் ஊரகப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும், கிராமம் மற்றும் நகர்ப்புற மக்களின் தயாரிப்புகளை நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் விதமாக முதல் முறையாக அரசு ஒரு பிரத்தியேக ஈகாமர்ஸ் தளத்தை உருவாக்கியுள்ளது .

இந்திய மக்கள் மத்தியில் தற்போது எப்போதும் இல்லாத வகையில் காதி மற்றும் கிராமப்புற தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக 2018-19 நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் காதி பொருட்களின் தேவை 25 சதவீதம் அதிகரித்தது எனக் காதி மற்றும் கிராம தொழிற்துறை அமைப்பின் தலைவர் வினய் குமார் தெரிவித்துள்ளார்.காதி மற்றும் கிராமப்புற தயாரிப்புகளுக்காக உருவாக்கப்பட்ட இந்தப் இணைய தளம் வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் பொருட்களையும், ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களையும் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும் . மேலும் இந்தத் தளத்தில் ஆடை, மளிகை பொருட்கள், அழகு சாதனங்கள், வீட்டு அலங்கார பொருட்கள், உடல் நலம் மற்றும் ஆரோக்கியப் பொருட்கள், அடிப்படைத் தேவைகள், பரிசுப் பொருட்கள் எனப் பலவும் விற்பனைக்காகப் பட்டியலிடப்பட்டு உள்ளது. இந்த தளத்தின் இணைய முகவரி https://www.ekhadiindia.com/

More News >>