மகளானாலும் உயர் அதிகாரி: ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர் தந்தை

அதிகாரி ஒருவருக்கு சல்யூட் அடித்த ஏற்பட்டால் அடுத்த நொடியே கண்கலங்கினார் காரணம் அவர் சல்யூட் அடித்தது தான் பெற்ற மகளுக்கு. இந்த உயர்ந்த அந்தஸ்தில் அவளைப் பார்க்கும் போது கண்கள் பணித்தது என்று பெருமை பொங்கச் சொல்கிறார் அந்த இன்ஸ்பெக்டர் தந்தை. அரசுத் துறையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு அவரது கீழ் பணிபுரியும் அலுவலர்கள் ஊழியர்கள் வணக்கம் செலுத்துவது போலீசாக இருப்பின் சல்யூட் அடிப்பது அன்றாட நடவடிக்கைகளில் ஒன்று. கடந்த 30 ஆண்டுகளாக உயர் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சல்யூட் அடித்த ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனது மகளுக்கு அத்தகைய மரியாதையை தான் கொடுத்ததை நினைத்து பூரித்துப் போயிருக்கிறார்.

திருப்பதி கல்யாணி அனையில் உள்ள காவல் பயிற்சி பள்ளியில் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருபவர் ஷாம் சுந்தர். இவரது மகள் பிரசாந்தி. கடந்த 2018-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று குண்டூர் நகர கூடுதல் ஆனையராக நியமிக்கப்பட்திருக்கிறார். ஆந்திர மாநில காவல் துறையின் முதல் காவல் தற்காலிக காவல் பயிற்சி மற்றும் சாகச நிகழ்ச்சி திருப்பதியில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க பிரசாந்தியும் ஷாம் சுந்தரும் பாதுகாப்பு பணிக்கு வந்தனர். தந்தையும், மகளும் ஒரே இடத்தில் பணியாற்றியபோது இருவரும் சந்திக்க வேண்டியிருந்தது. தன்னைக் காட்டிலும் உயர் பதவியில் இருக்கும் மகளைப் பார்த்து பெருமையுடன் ஷாம் சுந்தர் சல்யூட் அடித்தார்.

மகள் என்று கருதாமல், தன்னை விட உயர் அதிகாரி வந்ததும், உடனே எழுந்து நின்று அவர் சல்யூட் அடித்தது அங்கிருந்த மற்ற போலீஸ் அதிகாரிகளை திகைக்க வைத்தது. இதுகுறித்து ஷாம் சுந்தர் கூறுகையில் முதல் முறையாக நானும், எனது மகளும் ஒரே இடத்தில் பணியாற்றினோம். எனக்கு மேலதிகாரியாக என் மகளே வந்தது என் பாக்கியம். நான், என் உயர் அதிகாரி என்பதால், அவருக்கு சல்யூட் அடித்தேன். அப்போது அவரும் ஒரு கூடுதல் காவல்துறை ஆணையர் என்ற ரீதியிலேயே அதை ஏற்றுக்கொண்டார். ஆனால், இது குறித்து நாங்கள் ஒருவொருக்கொருவர் ஆலோசிக்கவில்லை. திட்டமிடவில்லை.

வீட்டில் சாதாரண, தந்தை, மகள்தான். இருப்பினும் என் மகளுக்கு நான் சல்யூட் அடித்தது பெருமையாக விஷயம். இத்தனை வருட உழைப்பில் பல அதிகாரிகளுக்கு சல்யூட் அடிக்கும் போது வராத ஒரு கண்ணீர் முதன்முறையாக தனது மகள் கம்பீரத்துடன் வந்து நிற்கும் போது, உயர் அதிகாரி என்ற முறையில் அவருக்கு சல்யூட் அடிக்கும் போது வந்தது. அதுவும் ஆனந்த கண்ணீர் தான் என்று ஷாம் சுந்தர் தெரிவித்தார். இதனை கவனித்த திருப்பதி எஸ். பி. ரமேஷ் தந்தை மகள் இருவரும் காவல் துறையில் பணிபுரிந்து வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தனது தந்தையின் கண் முன் மகள் உயரதிகாரியாக மக்கள் சேவையில் ஈடுபடுவது யாருக்குமே கிடைக்காத அபூர்வ தருணம் என அவர் பாராட்டி இருக்கிறார்.

More News >>