கிரண் பேடிக்கு எதிராக போராட்டம் : புதுவை முதல்வர் அறிவிப்பு

ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து வரும் 8 ந்தேதி முதல் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணாப்போராட்டம் நடத்தப்போவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நியமிக்கப்பட்ட நாள் முதல் அவருக்கும் முதல்வர் நாராயணசாமி க்கும் கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. தினமும் ஒரு விமர்சனம், ஒரு அறிக்கை என இரு தரப்பிலிருந்தும் செய்வது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக கவர்னர் இருக்கிறார்.

அவரை இங்கிருந்து மாற்ற வேண்டுமென முதல்வர் நாராயணசாமி பகீரத பிரயத்தனம் செய்து வருகிறார். எனினும் இதுவரை அவரது முயற்சிக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் வரும் 8ஆம் தேதி முதல் கிரண் பேடிக்கு எதிராக போராட்டம் ஒன்றை நடத்த இருப்பதாக நாராயணசாமி தெரிவித்துள்ளார். கிரண்பேடிக்கு எதிராக இன்று தொடங்கிய பரப்புரை கூட்டத்தில் நாராயணசாமி இதைத் தெரிவித்தார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது: புதுச்சேரி மாநில முன்னேற்றத்திற்கு தடையாகவும், மக்கள் நலத்திட்டங்களை செயல்பட விடாமல் தடுத்து வஞ்சிக்கும் ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து வரும் 8 ஆம் தேதி முதல் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணாப்போராட்டம் நடத்தப் படும். கிரண்பேடியை பிரதமர் மோடி திரும்பப்பெறும் வரை தானும், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். கவர்னர் கிரண்பேடி புதுச்சேரியை தமிழகத்தோடு இணைக்க மோடி முயற்சித்து வருகின்றார் என இந்த கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி மீண்டும் குற்றச்சாட்டினார்.

More News >>