கொரோனா தடுப்பூசி போட 75 லட்சம் பேர் ரெடி
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இதுவரை 75 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் கோவின் சாப்ட்வேரில் பதிவு செய்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. COVID-19 2020 தடுப்பூசி தொடர்பாக அனைத்து மக்களுக்கும் அதன் விஷயங்களை எளிதாக தெரிவிக்க மத்திய சுகாதார அமைச்சகம் கோ - வின் (coWIN App) என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய கோவின் செயலி கொரானா தடுப்பூசியை போட்டுக் கொள்ள விரும்புவர்கள் தாங்களாகவே இந்த செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
புதிய கோவின் செயலி மூலம் கோவிட் 19 தடுப்பூசி விநியோகத்தை கண்காணிக்கவும் முடியும். மக்களுக்கான கோவிட்-19 தடுப்பூசியை முன்பதிவு செய்யவும் அதை பொதுமக்களுக்கு செலுத்தவும் இந்த இயங்குதளம் பயன்படுகிறது. இந்த செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கோ- வின் செயலியில் கொரோனா தடுப்பூசிபொட்டுகொள்ள இதுவரை 75 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர் என்று இது குறித்து மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.