கட்சியில் சேர்ந்த சில நாட்களில் ரூ.3.75 கோடியில் அலுவலகம்... சந்தேகம் கிளப்பும் கங்கனா!
கமலுடன் இந்தியன் படத்தில் நடித்தவர் ஊர்மிளா. இந்தியில் பூட். ஏக் அசீனா எனப் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பிலிருந்து விலை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். எம் பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதில் அவர் தோல்வி அடைந்தார். இந்நிலையில் நடிகை கங்கனா ரானவத் சில பிரச்சனைகளைச் சமீபத்தில் எழுப்பினார். மும்பை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் இருப்பதாகக் கூறினார்.
இது மகாராஷ்டிரா ஆளும் கட்சி சிவசேனாவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. கங்கனாவை எதிர்த்து கட்சியினர் போராட்டம் செய்தனர். அந்த நேரத்தில் கங்கனாவை எதிர்த்து ஊர்மிளா அறிக்கை வெளியிட்டார். இது சிவசேனா கட்சியினருக்கு ஆதரவாக அமைந்தது. இந்நிலையில் சிவசேனா கட்சியில் சேர அவருக்கு அழைப்பு வந்தது. அத்துடன் சட்டமேலவை உறுப்பினர் பதவியும் அளிக்கப்பட்டது. அதை ஏற்று காங்கிரசிலிருந்து விலகி சிவசேனா கட்சியில் சேர்ந்தார் ஊர்மிளா.
இதற்கிடையே, சிவசேனாவில் சேர்ந்த சில நாட்களில் ஊர்மிளா மும்பையின் கர் பகுதி லிங்க் சாலை பகுதியில் ஒரு கட்டிடத்தின் 6–வது மாடியில் ரூ.3.கோடியே 75 லட்சத்துக்கு புதிய அலுவலகம் ஒன்றை வாங்கி இருக்கிறார். இதை மையப்படுத்தி, மற்றொரு நடிகை கங்கனா ரணாவத் சிவசேனாவில் இணைந்தது முறைகேடாக இந்த அலுவலகத்தை ஊர்மிளா வாங்கி இருக்கிறார் என்று குற்றச்சாட்டு சுமத்தினார். அதற்கு பதில் கொடுத்த ஊர்மிளா, ``ஏற்கனவே இருந்த ஒரு இடத்தை விற்று அதில் கிடைத்த பணத்தில்தான் இந்த புதிய அலுவலகத்தை வாங்கி இருக்கிறேன். இதில் எந்த விதிமீறலும் இல்லை. கட்டத்தின் ஆவணங்களை காட்ட நான் தயார்" என்று விளக்கம் கொடுத்துள்ளார்.