தியேட்டர்களை மட்டும் ஏன் எதிர்க்கிறீங்க? திருப்பூர் சுப்பிரமணியம் கேள்வி
தமிழகத்தில் பொங்கலையொட்டி தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுடன் படங்களை திரையிட அரசு அனுமதி அளித்துள்ளது. சினிமாத்துறையினர் இதனை வரவேற்றாலும் இது நல்லதல்ல என்ற ரீதியில் அரசின் இந்த நடவடிக்கையை விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது ஒரே இடத்தில் அத்தனை பேர் இருந்தால் கொரானா எளிதில் பரவ வாய்ப்புண்டு. எனவே அரசின் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டிய ஒன்று என்ற ரீதியில் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன இது குறித்து தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகிகளில் ஒருவரான திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்திருப்பதாவது: 100 நிருபர்கள் ஓரிடத்தில் இணைந்து பணியாற்றுவதில் பரவாத கொரோனா, தேர்தல் பிரச்சாரம் நடக்கும் போது நடக்கும் போது கூடும் கூட்டத்தால் பரவாத கொரோனா, ஷாப்பிங் மால், டாஸ்மாக் பார்களால் பரவாத கொரோனா தியேட்டர்களில் முழு கொள்ளளவை அனுமதிப்பதன் மூலம் கொரோனா அதிகரிக்கும் என்று ஏன் சார் சொல்கிறீர்கள்?
இத்தனைக்கும் தியேட்டருக்கு வரும் ஒவ்வொரு ரசிகரையும் டெம்ப்ரேச்சர் டெஸ்ட் செய்துதான் உள்ளெ அனுப்புகிறோம்.. மாஸ்க் இல்லாமல் வரிவோருக்கு இலவச மாஸ்க் கொடுக்கிறோம்.. இதை எந்த வணிக வளாகமாவது செய்கிறதா? எந்த அரசியல் கூட்டத்திலாவது நடைமுறைப்படுத்தப்படுகிறதா? இவ்வளவு ஏன்? ப்ளைட் டிக்கெட் வாங்க சோஷியல் டிஸ்டன்ஸ் செய்யச் சொல்லி ப்ளைட்டில் ஏறியதும் நெருக்கியடித்து உட்கார வைப்பதை ஏன் யாரும் தட்டிக் கேட்கவில்லை. இப்போது தியேட்டர்களால் கொரோனா பரவும் சொல்லும் பத்திரிகையாளர்கள் யாருமே இந்த கொரோனா காலத்தில் விமானப் பயணம் செய்வதில்லையா?
அதிலும் இந்த நடிகை கஸ்தூரி எல்லாம் தியேட்டரால் கொரொனா பரவும் என்று சொல்வதெல்லாம் டூ மச். இதில் ,ஒரு விஷயத்தை பலரும் கவனிக்க தவறி விட்டார்கள். ஷாப்பிங் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் நேருக்கு நேர் பேசினால்தான் வணிக நடக்கும், அதனால் கொரோனா பரவ அதிக வாய்ப்புண்டு.. ஆனால் தியேட்டருக்குள் வந்தால் இரண்டரை மணி திரையை மட்டுமே கவனிப்பதால் அக்கம் பக்கம் பேச வேண்டிய அவசியமில்லாத வணிகத்தை சினிமா செய்கிறது. இதனால் எப்படி கொரோனா பரவும்..?